CSK vs GT LIVE Score: செல்லாக் காசான குஜராத்; 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
IPL 2024, CSK vs GT LIVE Score: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மடுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்துள்ளது.
31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் தனது விக்கெட்டினை பத்திரான பந்தில் இழந்து வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.!
டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை தேஷ் பாண்டே பந்தில் 16 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
குஜராத் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
விஜய் சங்கர் தனது விக்கெட்டினை 12 பந்தில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் டேரில் மிட்ஷெல் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
குஜராத் அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகின்றது.
குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சாஹா தனது விக்கெட்டினை 17 பந்தில் 21 ரன்களில் இழந்து வெளியேறினார்.
குஜராத் அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 32 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சுப்மன் கில் தனது விக்கெட்டினை 8 ரன்களில் இழந்து வெளியேறினார். 3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 28 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்து சிறப்பான ஆட்டத்தினை தொடங்கியுள்ளது.
முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணி 207 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்து குஜராத் அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
19.3 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக ஆடி வந்த ஷிபம் துபே தனது விக்கெட்டினை அரைசதம் விளாசிய பின்னர் இழந்து வெளியேறினர்.
22 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து சென்னை அணியின் சார்பில் முதல் அரைசதத்தினை எடுத்துள்ளார் ஷிபம் துபே..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டினை இழந்து 172 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 128 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை பறிகொடுத்தார். 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 46 ரன்கள் எடுத்தார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே நிற்கின்றனர்.
இரண்டாவது சிக்ஸரை பறக்க விட்டுள்ளர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சிவம் துபே.
முதல் பந்திலேயே ஷிவம் துபே சிக்ஸர் பறக்க விட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அஜிங்க்யா ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார் ரஹானே.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 69 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக் ஆடி வந்த ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை ரஷித் கான் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 20 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார்.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
ரச்சின் ரவீந்திரா 17 பந்தில் 41 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.
4.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
சென்னை அணி 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 3.4 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக ரச்சின் ரவீந்திரா அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வருகின்றார்.
மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் ரச்சின் ரவீந்திரா பவுண்டரி, சிக்ஸர் விளாசி சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இந்த ஆட்டத்தின் முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜின் கேட்சை சாய் கிஷோர் தவறவிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணி களமிறங்கியுள்ளது.
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில்(கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்
சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது.
சற்று நேரத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Background
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது. களமிறங்கியுள்ள 10 அணிகளும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 26ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது.
இரு அணிகளும் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டது. இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி கடந்த ஆண்டு கோப்பையை குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் மைதானத்தில் வென்றது. இதற்கு பழி வாங்கும் விதமாக இன்று குஜராத் அணி ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இதுமட்டும் இல்லாமல், இந்த ஆண்டு சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி தனது கேப்டன்சியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார். அதேபோல், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றுவிட்டதால், குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக அணியை வழிநடுத்துகின்றார்.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டில் ஐபிஎல் தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக பார்க்கபடுகின்ற அணிகளை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை அணி தனது சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்தி மிரட்டலான தொடக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளின் கேப்டன்களும் இளம் வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தொடக்க ஆட்டக்காரகளாக தங்களது அணிக்காக களமிறங்குகின்றனர். இருவரும் இந்த ஆண்டுதான் கேப்டனாக அணியை வழிநடத்துகின்றனர். இருவரும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இருவரும் நேரடியாக மோதுவதால் இந்த போட்டி எதிர்கால இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுகின்றது.
நடப்பு சீசனில் இதுவரை மொத்தம் 6 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் சென்னை அணிக்கு சாதகமானதாக இருந்தாலும் குஜராத் அணி சென்னை மண்ணில் கொடியேற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என கூறலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -