ஐ.பி.எல் 2024:


இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. அதேபோல், மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளதுஇந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்து ஒன்று வெளியாகியுள்ளது.


விபத்தில் சிக்கிய குஜராத் அணி வீரர்:


அதாவது இந்த சீசனில் ரூ.3.60 கோடிக்கு குஜராத் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் வாகன விபத்தில் சிக்கியுள்ளார் என்பது தான் அதுஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ஷிம்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவரான ராபின் மின்ஸ் ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்ற முதல் ஆதிவாசி பழங்குடியினர் என்ற பெருமையை பெற்றார்.


இதுவரையில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இடம் பெறாத ராபின் மின்ஸ், ஐபிஎல் தொடர் மூலமாக இந்திய அணியில் இடம் பெறும் கனவில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான், ராபின் மின்ஸ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் சென்ற பைக்கின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது.


அவருக்கு  சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராபின் மின்ஸ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கிறார். இந்த விபத்து பற்றி அவரது தந்தை பேசுகையில்,”மற்றொரு பைக் மீது மோதியதில் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்என்று கூறியுள்ளார்.


.பி.எல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள சூழலில் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேநேரம் தன்னுடைய அறிமுக ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு காரில் சென்ற போது விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் சிகிச்சையெல்லாம் முடித்து விட்டு தற்போது தான் ஐ.பி.எல் தொடருக்கு ரெடி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!