இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 






ஏற்கனவே பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பேட் கம்மின்ஸ் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று ஒரே ஆண்டில் ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.  இரண்டு இறுதிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி உலக மகுடத்தை தன் வசப்படுத்தியது. இதுமட்டும் இல்லாமல், பலமான இந்திய அணியை அந்நிய மண்ணில் வீழ்த்துவது என்பதே சவாலான விஷயம். அப்படியான நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்றால் மிகவுமே சவாலான விஷயம். அப்படி இருக்கும்போது இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது. இதனாலே பேட் கம்மின்ஸ் மீது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. 


பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2024ஆம் ஆண்டு ஐபிஎல்லுக்கான மினி ஏலத்தில் 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் 20 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை போன முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 




மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் ஐசிசி டிராபிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஒரே ஆண்டில் வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. மிட்ஷெல் ஸ்டார்க்குக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு போன வீரர் வரிசையில் பேட் கம்மின்ஸ் உள்ளார். 


2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அணிகளும் அதன் கேப்டன்களும்


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - மகேந்திர சிங் தோனி


மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா


டெல்லி கேப்பிடல்ஸ்  - டேவிட் வார்னர் / ரிஷப் பண்ட் 


சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பேட் கம்மின்ஸ்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நிதிஷ் ராணா/ ஸ்ரேயாஸ் ஐயர்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபாப் டூ பிளசிஸ்


குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - கே.எல். ராகுல்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஷிகர் தவான்


ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்