இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, தோனி குறித்தும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடரில், அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


OTT | மலையாளப்படங்களுக்கு தனி ஓடிடி.. அதிரடி காட்டும் கேரளா.! எதிர்பார்ப்பில் கோலிவுட்!


இந்நிலையில், நடராஜன், காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளார்.  ஒரு ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சந்திப்பின்போது, மேலும் சிலர் உடனிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடராஜன், அன்பான நண்பர், நடிகரை சந்திப்பதில் உற்சாகமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது, நடராஜன், முருகன் சிலையை யோகி பாபுவுக்காக பரிசாக கொடுத்துள்ளார்.


 






மேலும், இவர்கள் சந்தித்த இடத்தில், டிவியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி விளையாடும் போட்டி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. சமூகவலைதளத்தில் இதைபார்த்த ரசிகர்கள், தோனி இருப்பது சுட்டிக்காட்டியுள்ளனர். இன்னும், நடராஜன், யோகி பாபு உடனான சந்திப்பில், தல தோனியும் இருக்கிறார் கண்டுபிடிங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.




முன்னதாக, ABP நாடு செய்திகளுக்கு ப்ரத்யேகமாக பேசிய நடராஜன் "ரீஹாப் ஸ்டார்ட் பண்ணிட்டேன், இன்னும் 4 மாத காலத்தில் ஃபுல்லா ரெடியாகி களத்திற்கு திரும்பிடுவேன்" என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.


ஒரு காயத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் திரும்பி கம்பேக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம், அது குறித்து கேட்டபோது "காயத்திற்கு பின்பு திரும்புவதில் எந்த கஷ்டமும் உணரவில்லை, ஏற்கனவே நான் முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளேன், அதையெல்லாம் பாக்கும்போது இது ஒன்னுமே இல்லை, அதனால சீக்கிரமே கம்பேக் குடுத்துருவேன்" என்கிறார்.


ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரும் தற்போது செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில் நடராஜன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாக அமைந்துள்ளது. நடராஜன் வரவை ஒத்துமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.


"4 மாதத்தில் கம் பேக் கொடுப்பேன்" - தமிழக வீரர் நடராஜன் எக்ஸ்க்ளூசிவ்..