நாடு முழுவதும் கர்ப்பணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த முடிவை எடுக்க என்ன காரணம்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒப்புதலுக்கு சில முக்கிய காரணிகளையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலாவதாக,கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்ட கரப்பிணிப் பெண்களின் உடல்நிலை விரைவாகவே ஆபாத்தான நிலையை எட்டுகிறது. இது, கருவில் வளரும் குழந்தைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில்,கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பெருந்தொற்று மிகவும் ஆபத்து நிறைந்ததாக உள்ளது.
இரண்டாவதாக, கர்ப்பிணிப் பெண்களிடம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் குறைபிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகள் அதிகரித்துள்ளது.
மூன்றாவதாக, ஏற்கனவே ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் ,35 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கும் கொரோனா பெருந்தொற்று அதிகப்படியான பாதிப்பை உருவாக்குகிறது.
கொரோனா இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு, முதல் அலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்ததும் முக்கிய காரணம் என நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின், செயற்குழு உறுப்பினர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போட்டால், அது தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," கோவிட்-19 தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவும் (NEGVAC) ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக, தேசிய அளவிலான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. இதில், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட, நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (NTAGI) பரிந்துரைக்கு இந்த கூட்டத்தில் ஒருமனதாக வரவேற்பு அளிக்கப்பட்டது" என தெரிவித்தது.
இதற்கிடையே, கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான வழிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. தடுப்பூசியால் கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், கருவில் வளரும் குழந்தைக்கு தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்த நம்பகமான தரவுகள் எதுவும் இல்லை. கற்ப அறிகுறிகள் தொடங்கியதில் இருந்து குழந்தை பேறு வரை உள்ள எந்த காலகட்டத்திலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும், கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 20 நாட்களுக்குள்,
- மூச்சுத்திணறல்
- நெஞ்சு வலி
- கை, கால்களில் வலி அல்லது வீக்கம்.
தடுப்பூசி போடப்பட்ட இடுத்தை தாண்டி பிற இடங்களில் தோலில் சிவப்பு புள்ளி அல்லது சிராய்ப்பு. - வாந்தியுடன் கூடிய வயிற்று வலி அல்லது வாந்தி இல்லாமல் ஏற்படும் வயிற்று வலி.
- முந்தைய பாதிப்பு இல்லாத நிலையில், வாந்தியுடன் கூடிய அல்லது வாந்தி இல்லாமல் ஏற்படும் வலிப்புகள்.
- வாந்தி மற்றும் வாந்தி இல்லாமல் ஏற்படும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி. (முந்தைய பாதிப்பு இல்லாத நிலையில்)
- பலவீனம் / கை, கால்கள் முடக்கம், அல்லது உடலின் ஒரு பகுதி (முகம் உட்பட);
- எந்தவொரு காரணமின்றி தொடர்ச்சியான வாந்தி
- பார்வை மங்குதல் அல்லது கண்ணில் வலி அல்லது இரட்டை உருவமாக தெரிதல்;
போன்ற அறிகுறிகள் இருந்தால் தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டாயம் வாசிக்க:
Pregnancy Vaccination FAQs : கோவாக்சினா? கோவிஷீல்டா? கர்ப்பிணிகளுக்கு எது பாதுகாப்பு?