பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர் கான். இவரும் அவரது மனைவி கிரண் ராவ் மற்றும் குழந்தைகள் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் கிர் பகுதியில் 15ஆவது திருமணநாளை கொண்டாடினர். இது தொடர்பான படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்தச் சூழலில் தற்போது திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 


அதன்படி வெளியாகியுள்ள அறிக்கையில், “இந்த 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நாங்கள் இருவரும் பல முறை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளோம். இவற்றால் எங்கள் இடையே அன்பு மற்றும் மரியாதை அதிகரித்தது. தற்போது நாங்கள் இருவரும் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்க உள்ளோம். அதில் கணவன்-மனைவி என்று இல்லாமல் எங்கள் குழந்தைகளுக்கான பெற்றோர் என்று மட்டும் இருக்க விரும்புகிறோம். இந்த விவாகரத்து தொடர்பாக நாங்கள் நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறோம். 


ரம்யா கிருஷ்ணன் Vs வனிதா விவகாரம்; வாழ்த்து தெரிவித்த சுரேஷ் சக்ரவர்த்தி!




 


அதை தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளோம்.தனித்தனியாக வாழ்ந்தாலும் ஒரு விரிவான குடும்பத்தை போல் இருக்க விரும்புகிறோம். எங்களுடைய மகன் அசாதை நாங்கள் இருவரும் சேர்ந்தே வளர்ப்போம். அத்துடன் பாணி தொண்டு நிறுவனம், படங்கள் உள்ளிட்ட வேறு சில பணிகளிலும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். எங்களுடைய இந்த முடிவிற்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவாகரத்து ஒரு முடிவு அல்ல புதிய தொடக்கம் என்பதை எங்களை போல் நீங்களும் உணர்வீர்கள் என்று கருதுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. 


 






 


அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருக்கும் இடையே 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் அசாத் என்ற மகன் 2011ஆம் ஆண்டு பிறந்தார். இதற்கு முன்பாக அமீர் கானிற்கு ரீனா தத்தா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இருந்தது. அதில் அவருக்கு ஐரா கான் மற்றும் ஜூனைத் கான் என்ற இரு குழந்தைகள் பிறந்திருந்தன. இவர்கள் இருவரும் கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் தான் அமீர் கான் கிரண் ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் பிரியும் முடிவை எடுத்துள்ளனர். 


மேலும் படிக்க: ரம்யா கிருஷ்ணன் Vs வனிதா விவகாரம்; வாழ்த்து தெரிவித்த சுரேஷ் சக்ரவர்த்தி!