கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின. அதேபோல், நாளை மறுநாள் (நவம்பர் 19) ஆம் தேதி நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியும் இந்த மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.  முன்னதாக, கடந்த 2011 கால் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை பழிக்குப் பழி தீர்க்கும் நோக்கில் விளையாடும் என்று எதிர்பார்ப்படுகிறது.


2011 கால் இறுதி போட்டி:


கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் கால் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டி குஜராத் மாநிலம அக்மதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் தான் நடைபெற்றது. முன்னதாக அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் 104 ரன்களை குவித்தார். 


பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த போட்டியில், இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுவராஜ் சிங் 57 ரன்கள் எடுத்தார். அதேபோல், கவுதம் காம்பீர் 50 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 53 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.


2023 இறுதிப் போட்டி:


இந்நிலையில்,  நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப் போட்டியும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இச்சூழலில், கடந்த 2011 ஆம் ஆண்டு கால் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்த முறை எப்படியும் வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும்.


அதேபோல், 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில்  ஆஸ்திரேலிய அணியிடம் 124 ரன்கள் வித்தியசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணியும் இந்த முறை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் பழிக்குப் பழி தீர்க்கும் முனைப்பில் விளையாடும் என்பதால் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க: India vs Australia World Cup Final 2023: ஐய்யோ இறுதிப் போட்டிக்கு இவரா நடுவர்? இவுரு வந்தா இந்தியா வென்றதா சரித்திரமே இல்லையே..!


மேலும் படிக்க: IND vs AUS Final Weather: உலகக்கோப்பை இறுதிப் போட்டி; ரிசர்வ் டேவிற்கு வாய்ப்பு இருக்கா? வானிலை நிலவரம் சொல்வது என்ன?