நாள் - 18.11.2023 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7:45 மணி முதல் காலை 8:45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை









காலை 9:00 மணி முதல் நண்பகல் 10:30 மணி வரை


குளிகை:


காலை 6:00 மணி முதல் காலை 7:30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1:30 மணி முதல் மதியம் 3:00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.


ரிஷபம்


மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் உண்டாகும் நாள்.


மிதுனம்


உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிறு தூரப் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் புதிய அனுபவம் ஏற்படும்.  பொறுமை காக்கவேண்டிய நாள்.


கடகம்


மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். திடீர் வரவுகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவு நிறைந்த நாள்.


சிம்மம்


உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மகிழ்ச்சியான நாள்.


கன்னி


உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். பணியில் கவனம் வேண்டும். சிக்கனமாகச் செயல்பட்டால் சில நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை உண்டாகும். கலைநுட்பமான செயல்களில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் ஈடேறும். அமைதியான நாள்.


துலாம்


ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழல் அமையும். வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த சகோதரர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்ப்பு நிறைந்த நாள்.


விருச்சிகம்


அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சேவைத் துறைகளில் இருப்போருக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகளால் புதிய பாதைகள் புலப்படும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் ஏற்படும் நாள்.


தனுசு


இழுபறியான வரவுகளைப் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிந்தித்துச் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். முன்னேற்றம் அடைந்தவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். அச்சம் நிறைந்த நாள்.


மகரம்


எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் விவேகம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து முடிவு எடுக்கவும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சூழ்நிலை அறிந்து முடிவுகளில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். உறுதியான நாள். 


கும்பம்


அக்கம்-பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் சில இழப்பைத் தவிர்க்கலாம். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும். சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


மீனம்


கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உதவியால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். முன்னேற்றமான நாள்.