Indonesia Open Badminton: இந்தோனேசியா ஓபன் பேட்மிடனில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை சாம்பியன்..!

இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.

Continues below advertisement

இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் ஷிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. 

Continues below advertisement

பேட்மிண்டன், இந்தோனேசியா ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில், சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, நடப்பு உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை இன்று ஜகார்த்தாவில் எதிர்கொண்டது.  முன்னதாக, இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி நேற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப் போட்டியில், மலேசியாவை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி, ) 21-17 21-18  என்ற செட் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தோனேசியா ஓபனை வென்ற முதல் இந்திய இரட்டையர் ஜோடி என்ற பெருமையை சாத்விக் சாய்ராஜ் மற்றும் ஷிராக் ஷெட்டி பெற்றுள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola