ரசிகர்கள் காத்துக்கிடந்த ஐசிசி உலகக்கோப்பை தொடர் இன்று (அக்டோபர் 5) தொடங்கியுள்ளது.
மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ள சூழலில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அதன்படி இந்த போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் களமிறங்கினர்.
அதில் டேவிட் மலான் நியூசிலாந்து பந்து வீச்சாளர் மேட் ஹென்றியின் பந்து வீச்சில் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதன்படி, அவர் 24 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் மொத்தம் 14 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.
ஆனால், மறுபுறம் பொறுமையாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகள் களத்தில் நின்றார். அவர், 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 33 ரன்கள் எடுத்து நியூசிலாந்து பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னெரிடம் தன்னுடைய விக்கெட்டை இழந்தார்.
முன்னதாக அந்த அணி 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்திருந்தது. இச்சூழலில் தான் மூன்றாவது விக்கெட்டுக்கு களம் கண்ட ஜோ ரூட் தன்னுடைய அதிரடியை தொடங்கினார்.
அரைசதம்.
ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் முதல் ரன், முதல் விக்கெட், முதல் சதம் மற்றும் முதல் அரைசதம் விளாசும் வீரர்கள் யார் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருப்பர்.
அதன்படி, இந்த உலகக்கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பெற்றுள்ளார்.
ஜோ ரூட்டின் அதிரடி
வலது கை பேட்ஸ்மேனான ஜோ ரூட் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடி வந்த ஜோ ரூட் 86 பந்துகளில் தற்போது வரை மொத்தம் 77 ரன்கள் சேர்த்த நிலையில் பகுதி நேர பந்து வீச்சாளர் க்ளன் பந்து வீச்சில் தனது விக்கெட்டினை இழந்தார். இவர் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கும்.
ஏமற்றம் அளித்த ஹாரி ப்ரூக்
இந்த லீக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 25 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார்.
அடுத்து வந்த மொய்ன் அலி 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபுறம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தற்போது ஜோ ரூட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஜோடி விளையாடி வருகிறது. 34 ஓவர்கள் முடிவின் படி இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 192 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ODI World Cup 2023: உலக கோப்பையை பார்க்க மைதானம் வர்றீங்களா? சர்ப்ரைஸ் தரும் பிசிசிஐ.. ஜெய் ஷாவின் அசத்தல் அறிவிப்பு
மேலும் படிக்க: Suryakumar Yadav: “உலகக்கோப்பையில் சூர்யகுமாரை சேர்க்க இதுதான் ஒன்றுதான் வழி” - முன்னாள் வீரர் பத்ரிநாத் கணிப்பு