உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 அகமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருமான பத்ரிநாத்திடம் ஏபிபி நாடு சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.


சூர்யகுமாருக்கு வாய்ப்பு உண்டா?


அதாவது, மிடில் ஆர்டரில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய சூர்யகுமார் யாதவ் போன்ற ஒருவரை உலகக்கோப்பையின் தொடக்கத்திலே இருக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராக மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த பத்ரிநாத், அவரை வைத்து பார்ப்பீங்களா? என்பது கேள்வி. ஆனால், இடம் இருக்க வேண்டுமா? இப்போதைக்கு மிடில் ஆர்டரில் இடம் இல்லை. இடம் இருந்தது என்றால் பார்க்கலாம். கே.எல்.ராகுல், இஷான் கிஷன் இல்லை என்றால் பார்க்கலாம். இப்போது ஆடும் லெவனில் நிச்சயமாக இடமில்லை.  


பத்ரிநாத் பதில்:


ஆடும் லெவனையே சொல்கிறேன். ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் ( இஷான் கிஷான் இல்லையென்றால்) அதன் பின்பு ஹர்திக் மற்றும் ஜடேஜா மிடில் ஆர்டரை நிரப்பி விடுவார்கள். இப்போதைக்கு சூர்யகுமார் யாதவுக்கு இடமில்லை. ஒருவேளை யாருக்காவது காயம் ஏற்பட்டால், மிகவும் மோசமாக ஆடினாலே அதன் பின்புதான் சூர்யகுமார் யாதவிற்கு உள்ளே வருவதற்கு வாய்ப்பு உண்டு.”


இவ்வாறு அவர் கூறினார்.


நடப்பு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கட்டாயம் அணியில் இடம்பெறும் வீரர்களாக ரோகித்சர்மா, விராட்கோலி, சுப்மன்கில், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் 8 பேர் இடம் நிச்சயம் உறுதி என்ற நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷன்கிஷன், சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அஸ்வின் இவர்களுக்கான வாய்ப்பு என்பது கேப்டன் ரோகித் சர்மா முடிவிலே உள்ளது.


ஸ்ரேயாஸ் - சூர்யகுமார்:


அதிலும், எஞ்சிய 3 இடங்களில் ஷமி அல்லது ஷர்துல் ஆகிய இருவரில் கண்டிப்பாக ஒருவர் இருப்பார் என்பதால் மீதமுள்ள 2 இடத்தில் பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவும்.


டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் ஆடினாலும் அவர் ஒருநாள் போட்டியில் நிலையான மற்றும் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் தடுமாறுகிறார். ஸ்ரேயாஸ் ஐயரும் சில போட்டிகளில் தடுமாறி வருகிறார். இருவருமே சிறந்த வீரர்கள் என்பதால் அணி நிர்வாகம் மிடில் ஆர்டரை வலுப்படுத்த யாரை களமிறக்கும் என்று போட்டியின்போதே முடிவெடுக்கும்.


மேலும் படிக்க: ENG vs NZ World Cup 2023: தொடங்கியது உலகக் கோப்பை திருவிழா; இங்கிலாந்தை பழி தீர்க்குமா நியூசிலாந்து; டாஸ் வென்று பந்து வீச முடிவு


மேலும் படிக்க: ODI World Cup 2023: தொடங்குகிறது ஐசிசி உலகக் கோப்பை - போட்டியையே மாற்றும் திறன் கொண்ட அந்த 10 வீரர்கள் யார்?