கிரிக்கெட் என்பது ஆசிய நாடுகளில் ஒரு மதமாகவே மாறியிருக்கிறது. சிறுவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை அந்த மதத்தை எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றிவருகிறார்கள். பலருக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்ற கனவு இருக்கும். குறிப்பாக இந்தியாவில் அதற்கு கோவில் கட்டாத குறைதான்.
இந்நிலையில், கிரிக்கெட் உலகில் சுழல் ஜாம்பவனாக வலம் வந்த ஷேன் வார்னே வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது ஸ்பின் பௌலிங்கால் அனைவரையும் திணறடிக்கிறான்.
குறிப்பாக அவனது பௌலிங் ஸ்டைலும், அவர் பந்தை டர்ன் செய்யும்விதமும் உலகத்தரத்தில் இருக்கின்றன. சிறுவன் வீசும் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் நாட்டியம் ஆடுகின்றனர்.
அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வார்னே, “வாவ், இது எனக்கு அனுப்பப்பட்டது. எவ்வளவு நன்றாக இருக்கிறது. யார் இவர்? இதனை தொடருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
சிறுவன் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என தெரியாமல் இருந்த சூழலில், வார்னேவின் ட்வீட்டுக்கு கீழே, அந்தச் சிறுவன் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று பலர் கூறியுள்ளனர்.
ஆசிய நாடுகளில் பொதுவாக பெரும்பாலானோர் பேட்டிங் மீது மட்டுமே கவனத்தை செலுத்துவார்கள். ஆனால் இந்த சிறுவன் தற்போதே சுழல் மூலம் அனைவரையும் திணறடிப்பதன் மூலம் வருங்காலத்தில் தொடர்ந்து பயிற்சியும், வாய்ப்பும் வழங்கப்பட்டால் நிச்சயம் சுழல் சூப்பர் ஸ்டாராக மாறுவான என பலர் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Ind vs Pak, T20 WC LIVE: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
T20 WC, Ind vs Pak: சரவெடி இந்தியா..சறுக்கும் பாகிஸ்தான்..நடக்கபோவது என்ன?
நெதர்லாந்து டூ வெஸ்ட் இண்டீஸ்- டி20 உலகக் கோப்பையில் குறைந்த ஸ்கோர் அடித்த அணிகள் !