Ind vs Pak, T20 WC LIVE: வரலாறு படைத்தது பாகிஸ்தான் : 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

T20 World Cup, Ind vs Pak LIVE: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

ABP NADU Last Updated: 24 Oct 2021 10:59 PM
வரலாறு படைத்தது பாகிஸ்தான் : 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

உலககோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

18 பந்தில் 17 ரன்கள் : வெற்றி பெறப்போவது யார்?

விக்கெட் இழப்பின்றி ஆடி வரும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 17 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களின் கையிலே அனைத்தும் தற்போது உள்ளது.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான் அரைசதம்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

10 ஓவர்களில் 71 ரன்கள் : காப்பாற்றுவார்களா இந்திய பவுலர்கள்

152 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வரும் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 71 ரன்களை எடுத்துள்ளது.

அரைசதம் அடித்த பாகிஸ்தான்

இந்தியாவிற்கு எதிராக இலக்கை நோக்கி ஆடி வரும் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்துள்ளது.

பவர்ப்ளேவில் 43 ரன்களை எடுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி பவர்ப்ளே முடிவில் 43 ரன்களை விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது. ரிஸ்வான் 25 ரன்களுடனும், பாபர் அசாம் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பவுண்டரி, சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். இதனால், முதல் ஓவரிலே பாகிஸ்தான் 10 ரன்களை எடுத்துள்ளது.

பவுண்டரி, சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதல் ஓவரிலே பவுண்டரி, சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார். இதனால், முதல் ஓவரிலே பாகிஸ்தான் 10 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா 151 ரன்களை குவித்தது

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது.

பொறுப்புடன் ஆடிய கிங்கோலி அவுட்

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடிய விராட்கோலி 49 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார்.

கிங் கோலி அரைசதம்

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடி வரும் விராட்கோலி, நெருக்கடியான நேரத்தில் 45 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களை எட்டியுள்ளார்.

அதிரடி ரூட்டுக்கு திரும்பிய இந்தியா

இந்திய அணி 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியுள்ளதால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் அதிரடியில் இறங்கியுள்ளது. விராட்கோலியும், ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தில் இறங்கியுள்ளனர்.

100 ரன்களை எட்டிய இந்தியா

இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எட்டியுள்ளது. விராட்கோலி 39 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் அவுட்

இந்திய அணிக்காக அதிரடியாக ஆடிய ரிஷப்பண்ட் ஷதாப்கான் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து 30 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்களை எடுத்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்தடுத்த இரு சிக்ஸர்கள் - ரிஷப்பண்ட் அபாரம்

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி வீசிய 12வது ஓவரில் ரிஷப்பண்ட் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியுள்ளார்.

இந்திய அணி நிதான ஆட்டம் : கரை சேர்ப்பார்களா கோலி-ரிஷப்பண்ட்?

இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. கோலியும், ரிஷப்பண்டும் களத்தில் உள்ளனர்.

அரைசதத்தை கடந்த இந்தியா

இந்திய அணிக்காக 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து ஆடிவரும் விராட்கோலியும், ரிஷப் பண்டின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 10வது ஓவரில் 50 ரன்களை கடந்துள்ளது.

ரிவியூவில் தப்பிப்பிழைத்த ரிஷப்பண்ட்

இந்திய அணிக்கு மிகப்பெரிய பார்டர்னர்ஷிப் தேவைப்படும் சூழலில் ரிஷப்பண்டிற்கு பாகிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்டனர். ரிவியூவில் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரிந்ததால் நடுவரின் நாட் அவுட் என்ற தீர்ப்பையே மூன்றாவது அம்பயர் வழங்கினார்.

மூன்றாவது விக்கெட்டையும் இழந்த இந்தியா

இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சியளிக்கும் விதமாக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முதல் சிக்ஸரை விரட்டிய விராட் கோலி

இந்தியா அணிக்காக ஜோடி சேர்ந்து ஆடி வரும் விராட்கோலியும், சூர்யகுமார் யாதவும் துரிதமாக ரன்களை சேர்த்து வருகின்றனர். விராட்கோலி இந்தியாவிற்காக தனது முதல் சிக்ஸரை ஷாகின்ஷா அப்ரிடியின் ஓவரில் விளாசியுள்ளார்.

இந்தியாவிற்கான முதல் சிக்ஸரை விளாசிய சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களை எடுத்துள்ளது. 3வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடித்து இந்தியாவிற்கான முதல் சிக்ஸரை தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி - போல்டானார் கே.எல்.ராகுல்

இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சியாக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஷாகின்ஷா அப்ரிடி பந்தில் போல்டாகி வெளியேறினார்.

நல்லிணக்கத்தை வலியுறுத்திய இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள்

இந்திய-பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அனைவரும் இரு நாட்டின் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக போட்டி தொடங்கும் முன் ஒரு நிமிடம் அமைதி காத்தனர்.

முதல் ஓவரிலே ஆட்டமிழந்த ரோகித் சர்மா

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோகித்சர்மா தான் சந்தித்த முதல் பந்திலே எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்

உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி - கபில் தேவ்

டி20 போட்டியில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி என்றும், ஒரு குறிப்பிட்ட நாளில் யாரையும் தோற்கடிக்க முடியும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறினார்.


இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பாக ஏபிபி செய்தியிடம் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் பேசினார். அப்போது அவர், "இந்திய அணி வலுவாகத் தெரிந்தாலும், அழுத்தத்தை சமாளிக்க முடியாவிட்டால், பாகிஸ்தானால் போட்டியை வெல்ல முடியும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் பரபரப்பான போட்டியாக இருக்கும்" என்று கூறினார்.

கணிப்பு - இந்தியா பிளேயிங் லெவன்

இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

பவுல் அவுட் முறையில் இந்தியா பெற்ற வெற்றி

2007ம்  ஆண்டு அறிமுகமான முதல் உலககோப்பை போட்டித் தொடரில் ஒரே பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ராபின் உத்தப்பா, தோனி ஆகியோரின் அதிரடியால் இந்தியா 141 ரன்களை குவித்தது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியும் 141 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. இதனால், டை ஆகிய இந்த போட்டியில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.

Background

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை வழிகாட்டியாகவும், விராட் கோலியை கேப்டன்சியாகவும் கொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை 13-0 என நீட்டிக்க வேண்டும் என்று ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


ஏழாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


உலகக் கோப்பையில் இரு அணிகளின் நேருக்கு நேர் மோதல்களைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் பாகிஸ்தான் இன்னும் வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.