பழங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். மூன்று வேலையும் உணவிற்கு பதிலாக பழங்களை கொடுத்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். சிலருக்கு பழங்கள் என்றாலே ஒவ்வாமை. எந்த பழத்தையும் சாப்பிட பிடிக்காது. மேலும், ஆரோக்கியம் சார்ந்த சில விஷயங்கள் கட்டுக்கதைகளுடன் வருவது இயல்பாக இருக்கிறது. பழங்களை எந்த நேரத்தில் சாப்பிடலாம். எப்போது சாப்பிடக்கூடாது போன்ற பல விஷயங்கள் இருக்கின்றன.


பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்




 பழங்கள் காலை வெறும் வயிற்றில் காலை உணவாக சாப்பிடலாம். உணவிற்கு முன் பழங்களை சாப்பிட்டு அரை மணிநேரத்திற்கு பிறகு மற்ற சமைத்த உணவுகளை சாப்பிடலாம். இரவும் உணவிற்கு முன் பழங்களை சாப்பிடலாம்.


அதிக விலையுயர்ந்த பழங்கள் தான் ஊட்டச்சத்து மிக்கது? ஆரோக்கியமானது?


இது முற்றிலும் கட்டுக்கதை. அவரவர் ஊரில் விளையும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து மிக்கது. அந்த சீசனில் விளையும் சீசனல் பழங்கள் ஊட்டச்சத்து மிக்கது. ஒவ்வொரு பழமும் அதற்குரிய குணாதிசயங்களுடன் சுவையுடனும், ஊட்டசத்துடனும் இருக்கும். மழை காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும். இது முற்றிலும் கட்டுக்கதை. அனைத்து பருவத்திலும் பழங்கள் சாப்பிடலாம். பழங்கள் வைட்டமின் , தனிமங்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் மழை காலத்திலும் பழங்கள் சாப்பிடலாம். இதனால் தொற்று நோய்கள் வராமல் இருக்கும்.




சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடகூடாது?


பழங்கள் சாப்பிடலாம். பழங்களில் இருக்கும் நார்சத்து, மற்றும் ஊட்டச்சத்துகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதிக இனிப்பு சுவை கொண்ட வாழை பழம், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். என்ன பழங்கள் சாப்பிடலாம் என அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எடுத்து கொள்ளுங்கள். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது அவசியம்.


பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்கும்.


இது உண்மை. பழங்கள் அதிக கலோரிகள் கொண்டுள்ளதால் பழ சாறுகள் எடையை குறைக்காது. குறிப்பாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் பழ சாறுகளை எடுத்து கொண்டால், உடல் எடை அதே அளவில் இருக்கும். பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழமாக சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ளும்.




ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் சாப்பிட வேண்டும்.


ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகையான பழங்கள் சாப்பிட வேண்டும். இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். பழங்கள் அனைத்தையும் சேர்த்து பழக்கலவையாக எடுத்துக்கொள்ளலாம். விலையுயர்ந்த பழங்கள் சாப்பிட வேண்டும் என்று இல்லை.