கால்பந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த UEFA(Union of European Football Associations)  யூரோ கோப்பை 2024 தொடர் இன்று நள்ளிரவு தொடங்கி வரும் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முதல் போட்டியில் ஜெர்மனி – ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.


யுஇஎஃப்ஏ யூரோ கால்பந்து கோப்பை:


இத்தொடரின் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் ( ஜூன் 14 -26) பங்கேற்கின்றன. ஜூலை 9, 10-ல் அரை இறுதியும், ஜூலை 14-ல் இறுதிப்போட்டியும் பட்டியலிடப்பட்டுள்ளது. லீக், நாக் – அவுட் என மொத்தம் 51 போட்டிகள் நடைபெற உள்ளன.


விளையாடும் அணிகள்:


குழு A : ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து


குரூப் பி: ஸ்பெயின், அல்பேனியா, இத்தாலி, குரோஷியா


குரூப் சி: இங்கிலாந்து, ஸ்லோவேனியா, செர்பியா, டென்மார்க்


குழு D: போலந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து


குழு E: உக்ரைன், பெல்ஜியம், ருமேனியா, ஸ்லோவாக்கியா


குழு F: துருக்கி, செக் குடியரசு, போர்ச்சுகல், ஜார்ஜியா


எங்கு நடைபெறும்?


யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை 2024 போட்டிகள் ஜெர்மனியில் நடைபெறுகிறது. அதன்படி, கெல்சென்கிர்சென், ஃபிராங்க்ஃபர்ட், டார்ட்மண்ட், முனிச், ஹாம்பர்க், டசல்டார்ஃப், கொலோன், லீப்ஜிக் மற்றும் ஸ்டட்கார்ட் ஆகிய இடங்களின் நடைபெற உள்ளது. 


தொலைக்காட்சியில் நேரலையை எப்படி பார்க்கலாம்?


யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் இந்தியாவில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


லைவ் ஸ்ட்ரீமிங்கை எப்படி பார்க்கலாம்?






யுஇஎஃப்ஏ யூரோ கோப்பை 2024 நேரடி ஸ்ட்ரீமிங்: இந்தியாவில் UEFA யூரோ 2024 நேரடி ஸ்ட்ரீமிங் SonyLiv இல் பார்க்க முடியும். முன்னதாக இந்த போட்டிகளில் விளையாட உள்ள வீரர்கள் அனைவரும் ஜெர்மனிக்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 


மேலும் படிக்க: ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை


மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்