மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 490 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில், 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர். 


டெல்லியில் ஷபாலி:


இந்தநிலையில்,  19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ஷஃபாலி வர்மாவை 2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 


ஷஃபாலி வர்மா சமீபத்தில் இந்திய 19 வயதுக்குட்பட்ட  டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக கேப்டனாக வென்று கொடுத்தார். 19 வயதான இவர் இந்தியாவுக்காக 51 டி20 போட்டிகளில் விளையாடி 1231 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், டி20 பெண் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷஃபாலி வர்மா 8வது இடத்தில் இருக்கிறார். 






தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் U-19 T20 உலகக் கோப்பையின் தொடக்க சீசனில் U19 மகளிர் அணி சமீபத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது . ஷபாலி வர்மா தலைமையிலான அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் உலகப் கோப்பையை வென்றது.


ஜெமிமா ரோட்ரிக்ஸ்:


22 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணியில் இடம்பெற்றுள்ளது. நடந்துகொண்டிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜெமிமா அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு, 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது பெண் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் ஜெமிமா. 2017 ஆம் ஆண்டு நவம்பரில், அவுரங்காபாத்தில் சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 163 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார்.


கடந்த 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். 


மிரட்டல் வீராங்கனை:


அதேபோல், 2018 ம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவுக்கான மகளிர் டுவென்டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜெமிமா, மார்ச் 12, 2018 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


மே 2021 இல், ஜெமிமாவின் திறமையை பார்த்த இந்திய மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டிக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். 


டெல்லி கேபிடல்ஸ் அணியால் எடுக்கப்பட்ட வீராங்கனைகள் பட்டியல்:


ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி


மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி


ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி


டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்


ராதா யாதவ் - ரூ 40 லட்சம்


ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்


மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி