IPL 2025 CSK Vs GT: ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

Continues below advertisement

பஞ்சாபை கதறவிட்ட கொல்கத்தா:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜரத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்கக் கூடிய, புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிக்கப்போவது யார் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இரண்டு அணிகளும் தோல்வியுற்று ஷாக் அளித்தன. இந்நிலையில் தான், நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில், யாருமே எதிர்பாராத விதமாக பஞ்சாப் அணி தோல்வியுற்றது. 206 ரன்கள் குவித்ததால் பஞ்சாப் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக டெல்லி அணி வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடி அபார வெற்றி பெற்றனர். அதன்படி, கடைசி மூன்று போட்டிகளில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 3 அணிகள், பிளே-ஆஃபிற்கு கூட முன்னேறாத அணிகளிடம் மண்ணை கவ்வியுள்ளன.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் 13 9 4 18 0.602
பஞ்சாப் 13 8 4 17 0.327
பெங்களூரு 13 8 4 17 0.255
மும்பை 13 8 4 16 1.292
டெல்லி 14 7 6 15 0.011
லக்னோ 13 6 7 12 -0.337
கொல்கத்தா 13 5 6 12 0.193
ஐதராபாத் 13 5 7 11 -0.737
ராஜஸ்தான் 14 4 10 8 -0.549
சென்னை 13 3 10 6 -1.030

மும்பைக்கு ராஜயோகம்:

நான்காவதாக மும்பை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியபோது, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க அந்த அணிக்கு மிகவும் சொற்பமான வாய்ப்பே இருந்தது. ஆனால், முடல் மூன்று இடங்களில் உள்ள அணிகளும் அடுத்தடுத்து தலா ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளன. இதனால், முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு, நான்கு அணிகளுக்கும் சமமாக மாறியுள்ளது. கூடுதலாக, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில் மும்பை அணிக்கு தான் மிகவும் வலுவான ரன் - ரேட் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை குஜராத் அணி இன்று தோல்வியுற்றால், மும்பை அணி முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும். அதன்படி, தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாபை வீழ்த்தினாலே, மும்பை கடகடவென மேலே சென்றுவிடலாம்.

குஜராத்தை வதைக்குமா சென்னை?

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, அகமதாபாத் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்ய, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது குஜராத்திற்கு கட்டாயமாகும். அதேநேரம், சென்னை அணி நடப்பு தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியதால், இந்த போட்டியின் முடிவு அவர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், கடந்த மூன்று போட்டிகளில் டாப்-3 அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகள் அதிர்ச்சி அளித்ததை போன்று, இன்று சென்னை ஏதேனும் மேஜிக் நிகழ்த்துமா? என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். குறிப்பாக மும்பை அணி ரசிகர்கள் இன்று சென்னைக்கு முழு ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர். 

கொல்கத்தா - ஐதராபாத் மோதல்:

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இரண்டு அணிகளும் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்ததால், இந்த போட்டியின் முடிவுகள் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே இது ஒரு சம்பிரதாய போட்டியாகவே நடைபெறுகிறது.