உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற அனைத்த அணிகளுடனும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது.


ஆப்கான் அபார வெற்றி:


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது.


முன்னதாக இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோசமான தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் அந்த அணி கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளிடமும் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை செய்துள்ளது.


அனைத்து அணிகளிடமும் தோல்வி:


கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி உள்ளன.


இதில் இங்கிலாந்து அணி  அனைத்து அணிகளிடமும் உலகக் கோப்பை தொடர்களில் தோல்வியை தழுவியுள்ளது. 


அதன்படி, கடந்த 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதலில் தோல்வியை தழுவியது. அதன்பிறகு கடந்த 1979 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும் தோல்வி அடந்தது.


பின்னர், இந்தியாவிடம் 1983 ஆம் ஆண்டும் , பாகிஸ்தான் அணியுடன் 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தோல்வியை பதிவு செய்தது. இதற்கிடையில், நியூசிலாந்து அணியிடன் கடந்த 1983 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து தோல்வி பெற்றது.


ஜிம்பாப்வே அணியிடமும் தோற்ற இங்கிலாந்து:


இப்படி கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளிடன் உலகக் கோப்பை தொடர்களில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி அப்போது அதிகம் அறியப்படாமல் இருந்த ஜிம்பாப்வே அணியிடம் 1992 ஆம் ஆண்டு தோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1996-ல் இலங்கை அணியுடன் தோல்வி அடைந்த இங்கிலாந்து அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வி அடைந்தது. இப்படி டெஸ்ட் போட்டிகள் விளையாட தகுதி பெற்ற அனைத்த அணிகளுடனும் உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த இங்கிலாந்து, கடந்த 2011 ஆம் ஆண்டில் வங்கதேச அணியிடம் பரிதாப தோல்வியை பெற்றது. மற்றொரு தோல்வியை அதே ஆண்டில் அயர்லாந்திடம் பதிவு செய்தது இங்கிலாந்து.


இந்நிலையில் தான் நேற்று (அக்டோபர் 15) டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து.


இந்த தோல்வியின் மூலம் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் 11 அணிகளிடனும், உலகக் கோப்பை தொடரின் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து பெற்றிருப்பது அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Cricket In Worldcup: இந்திய ரசிகர்கள் உற்சாகம்..! 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட 5 புதிய விளையாட்டுகள் சேர்ப்பு


 


மேலும் படிக்க: AUS Vs SL Score LIVE: மிரட்டல் பேட்டிங்; ஆஸ்திரேலியாவுக்கு தண்ணி காட்டும் இலங்கை