Syed Mushtaq Ali Trophy 2023: நடப்பாண்டிற்கான சையது முஷ்டாக் அலி டிராபியின் முதல் போட்டியில், 5 குழுக்களாக 38 அணிகள் பங்கேறுள்ளன. 


சையது முஷ்டாக் அலி டிராபி:


இந்திய சீனியர் ஆடவர்களுக்கான முக்கிய உள்நாட்டு தொடரான சையத் முஷாக் அலி டிராபி இன்று தொடங்கியுள்ளது. இருபது ஓவர் ஃபார்மெட்டில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் ஐபிஎல் நட்சத்திரங்கள் தங்களது மாநில அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட உள்ளனர். சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 இறுதிப் போட்டி நவம்பர் 6 ஆம் தேதி பஞ்சாபின் மொஹாலியில் நடைபெறவுள்ளது.


ஐந்து குழுக்களில் மொத்தம் 38 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.  A, B மற்றும் C ஆகிய குழுக்களில் தலா 8 அணிகளும், E மற்றும் F ஆகிய பிரிவுகளில் தலா 7 அணிகளும் இடம்பெற்றுள்ளன.  ஜெய்ப்பூர், மும்பை, ராஞ்சி, மொஹாலி மற்றும் டேராடூன் ஆகிய ஐந்து இந்திய நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. சையத் முஷ்டாக் அலி டிராபி 2023-ன் அனைத்து நாக் அவுட் போட்டிகளும் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒளிபரப்பு விவரங்கள்:


சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 நேரடி ஸ்ட்ரீமிங்: ஜியோசினிமா


சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 நேரடி ஒளிபரப்பு: ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்


போட்டி அட்டவணை:



  • அக்டோபர் 16 - காலை 09:00: சத்தீஸ்கர் vs மிசோரம், சர்வீசஸ் vs சிக்கிம், அருணாச்சல பிரதேசம் vs குஜராத்

  • அக்டோபர் 16 - காலை 11:00 மணி: மணிப்பூர் vs ரயில்வே, உத்தரகாண்ட் vs விதர்பா, பரோடா vs ஜம்மு & காஷ்மீர், புதுச்சேரி vs ராஜஸ்தான், கர்நாடகா vs தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் vs நாகாலாந்து, பீகார் vs சண்டிகர்

  •  அக்டோபர் 16 - மதியம் 1:30: ஆந்திரா vs கோவா, ஹைதராபாத் vs மேகாலயா, அசாம் vs ஒடிசா

  • அக்டோபர் 16 - மாலை 4:30: ஹரியானா vs மும்பை, பெங்கால் vs மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம் vs கேரளா, டெல்லி vs உத்தரப் பிரதேசம், பஞ்சாப் vs சௌராஷ்டிரா

  • அக்டோபர் 17 - காலை 9:00: ஹைதராபாத் vs ஜம்மு & காஷ்மீர், அசாம் vs பீகார், கோவா vs மணிப்பூர்

  • அக்டோபர் 17 - காலை 11:00 மணி: மகாராஷ்டிரா vs உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் vs ஒடிசா, டெல்லி vs மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு vs உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் vs பஞ்சாப், மேகாலயா vs மும்பை, பெங்கால் vs ராஜஸ்தான்

  •  அக்டோபர் 17 - மதியம் 1:30: பரோடா vs மிசோரம், சண்டிகர் vs சிக்கிம், அருணாச்சல பிரதேசம் vs ரயில்வே, செவ்வாய், 17 அக்டோபர் - மாலை 4:30, ஜார்கண்ட் vs புதுச்சேரி, கேரளா vs சர்வீசஸ், நாகாலாந்து vs திரிபுரா, குஜராத் vs சௌராஷ்டிரா, சத்தீஸ்கர் vs ஹரியானா

  • அக்டோபர் 19 - காலை 9:00 மணி: மணிப்பூர் vs சவுராஷ்டிரா, ஹரியானா vs ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர் vs ஹைதராபாத், பீகார் vs கேரளா

  • அக்டோபர் 19 - காலை 11:00: டெல்லி vs நாகாலாந்து, அசாம் vs சர்வீசஸ், தமிழ்நாடு vs திரிபுரா, பஞ்சாப் vs ரயில்வே, கோவா vs குஜராத், பெங்கால் vs புதுச்சேரி, ஜார்கண்ட் vs உத்தரகாண்ட்

  • அக்டோபர் 19 - மதியம் 1:30: ஒடிசா vs சிக்கிம், ஆந்திரப் பிரதேசம் vs அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா vs மிசோரம்

  • அக்டோபர் 19 - மாலை 4:30: பரோடா vs மணிப்பூர், ராஜஸ்தான் vs விதர்பா, சண்டிகர் vs இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா vs மத்தியப் பிரதேசம்

  •  அக்டோபர் 21 - காலை 9:00 மணி: ஆந்திரப் பிரதேசம் vs குஜராத், சத்தீஸ்கர் vs மேகாலயா, ஒடிசா vs சர்வீசஸ்

  •  அக்டோபர் 21 - காலை 11:00 மணி: ஜம்மு & காஷ்மீர் vs மும்பை, பெங்கால் vs விதர்பா, ஜார்கண்ட் vs ராஜஸ்தான், பீகார் vs இமாச்சலப் பிரதேசம், டெல்லி vs கர்நாடகா, மத்தியப் பிரதேசம் vs திரிபுரா, மணிப்பூர் vs பஞ்சாப்

  • அக்டோபர் 21 - மதியம் 1:30: ரயில்வே vs சவுராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம் vs கோவா, பரோடா vs ஹரியானா, சண்டிகர் vs கேரளா

  • அக்டோபர் 21 - மாலை 4:30: மகாராஷ்டிரா vs புதுச்சேரி, ஹைதராபாத் vs மிசோரம், நாகாலாந்து vs உத்தரப் பிரதேசம், அசாம் vs சிக்கிம்

  • அக்டோபர் 23 - காலை 9:00 மணி: பரோடா vs ஹைதராபாத், அசாம் vs சண்டிகர், கோவா vs ரயில்வே

  • அக்டோபர் 23 - காலை 11:00 மணி: புதுச்சேரி vs விதர்பா, ஜார்கண்ட் vs மகாராஷ்டிரா, கர்நாடகா vs நாகாலாந்து, கேரளா vs சிக்கிம், திரிபுரா vs உத்தரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் vs சவுராஷ்டிரா, ஹரியானா vs மிசோரம்

  • அக்டோபர் 23 - மதியம் 1:30: இமாச்சலப் பிரதேசம் vs சர்வீசஸ், குஜராத் vs பஞ்சாப், சத்தீஸ்கர் vs மும்பை

  • அக்டோபர் 23 - மாலை 4:30: பெங்கால் vs உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர் vs மேகாலயா, டெல்லி vs தமிழ்நாடு, பீகார் vs ஒடிசா, ஆந்திரா vs மும்பை

  • அக்டோபர் 25 - காலை 9:00: கேரளா vs ஒடிசா, ஆந்திரா vs சவுராஷ்டிரா, ஹரியானா vs மேகாலயா

  • அக்டோபர் 25 - காலை 11:00: டெல்லி vs திரிபுரா, சண்டிகர் vs சர்வீசஸ், குஜராத் vs ரயில்வே, மகாராஷ்டிரா vs விதர்பா, பரோடா vs சத்தீஸ்கர், பெங்கால் vs ஜார்கண்ட், கர்நாடகா vs உத்தரபிரதேசம்

  • அக்டோபர் 25 - மதியம் 1:30: கோவா vs பஞ்சாப், ஹைதராபாத் vs மும்பை, அசாம் vs இமாச்சலப் பிரதேசம்

  • அக்டோபர் 25 - மாலை 4:30: மத்தியப் பிரதேசம் vs தமிழ்நாடு, பீகார் vs சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் vs மணிப்பூர், ஜம்மு & காஷ்மீர் vs மிசோரம், ராஜஸ்தான் vs உத்தரகாண்ட்

  • அக்டோபர் 27 - 09:00 AM: அருணாச்சல பிரதேசம் vs பஞ்சாப், மிசோரம் vs மும்பை, ஹிமாச்சல பிரதேசம் vs சிக்கிம்

  • அக்டோபர் 27 - 11:00 AM: கோவா vs சவுராஷ்டிரா, ஹரியானா vs ஹைதராபாத், புதுச்சேரி vs உத்தரகாண்ட், மகாராஷ்டிரா vs ராஜஸ்தான், அசாம் vs கேரளா, நாகாலாந்து vs தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் vs உத்தரப் பிரதேசம்

  • அக்டோபர் 27 - 01:30 PM: குஜராத் vs மணிப்பூர், சத்தீஸ்கர் vs ஜம்மு & காஷ்மீர், பீகார் vs சர்வீசஸ்

  • அக்டோபர் 27 - 04:30 PM: ஆந்திரப் பிரதேசம் vs ரயில்வே, ஜார்கண்ட் vs விதர்பா, பரோடா vs மேகாலயா, கர்நாடகா vs திரிபுரா, சண்டிகர் vs ஒடிசா


நாக்-அவுட் சுற்று போட்டிகள்:


காலிறுதிக்கு முந்தைய சுற்று:



  • அக்டோபர் 31, காலை 11 மணி - காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டி

  • அக்டோபர் 31, மாலை 04.30 மணி - காலிறுதிக்கு முந்தைய சுற்றின் 2வது போட்டி 


காலிறுதிச் சுற்று:



  • நவம்பர் 02, காலை 08.30 மணி - மூன்றாவது காலிறுதிப் போட்டி

  • நவம்பர் 02, காலை 11.00 மணி - முதல் காலிறுதிப் போட்டி

  • நவம்பர் 02, பிற்பகல் 01.30 மணி - நான்காவது காலிறுதிப் போட்டி

  • நவம்பர் 02, மாலை 04.30 மணி - 2வது காலிறுதிப் போட்டி


அரையிறுதிச் சுற்று:



  • நவம்பர் 04, காலை 11.00 மணி - முதல் அரையிறுதிப் போட்டி

  • நவம்பர் 04, மாலை 04.30 மணி - 2வது அரையிறுதிப் போட்டி


இறுதிப்போட்டி:



  • நவம்பர் 6ம் தேதி மாலை 04.30 மணியளவில் மொஹாலியில் இறுதிப்போட்டி நடைபெறும்