எம்.எஸ்.தோனி இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்றுகொடுத்தவர். அது மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளில் இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்ற சிறந்த பினிஷராகவும் ரசிகர்களால் போற்றப்படுகிறார். இதனிடையே எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த முறை தோனி விளையாடுவது தான் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


சிஎஸ்கே கேப்டன்:


முன்னதாக,  ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கும் தோனி கடந்த  2008 முதல் தற்போது வரை சென்னை அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து ரசிர்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்துள்ளார்.


அசாதரண சூழலிலும் சிறப்பாக கேப்டன்சி செய்வதால் கேப்டன் கூல் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். அவரின் தலைமையில் ஐபிஎல் போட்டியில் விளையாட நிறைய வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.


 


தோனியை கோபமடைய செய்யும் வழி:



இந்நிலையில் கூலாக இருக்கக்கூடிய தோனியை களத்தில் சுமாராக ஃபீல்டிங் செய்தால் மிகவும் எளிதாக கடுப்பேற்றி கோபமடைய வைக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய  வீரர் ஹைடன் கூறியுள்ளார். 


 


இது தொடர்பாக பேசியுள்ள அவர்,“எம்.எஸ்.தோனியை நீங்கள் மைதானத்தில் கடுப்பேற்ற வேண்டும் என்று நினைத்தால் மந்தமான ஃபீல்டிங் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். மேலும் நல்ல ஃபீல்டிங்கில் முக்கிய பங்காற்றாதீர்கள்”என்று தெரிவித்துள்ளார்.






அதேபோல், தோனி மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோருக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, எம்.எஸ்.தோனி தான் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங்கை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். ஆஸ்திரேலிய வீரரான ஹைடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


 


மேலும் படிக்க: National Senior Basketball Championship: 73-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் - இந்தியன் ரயில்வேஸை ஓடவிட்டு சாம்பியனான தமிழ்நாடு.!


 


மேலும் படிக்க: Chennai Grand Masters 2023: டிச.,15 முதல் சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - தமிழ்நாடு அரசு