ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் பின்னர், நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.


இந்தியா வரும் இங்கிலாந்து:


இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது ஷமி, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரை  4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.


இச்சூழலில், தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு 3 டி 20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதனையடைத்து  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று (டிசம்பர் 11) அறிவிக்கப்பட்டுள்ளது.  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இங்கிலாந்து அணி வீரர்கள்:






பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ் (WK), டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஒல்லி ராபின்சன் , மார்க்வுட்


இங்கிலாந்து vs இந்தியா அட்டவணை


முதல் டெஸ்ட்: இந்தியா - இங்கிலாந்து, ஜனவரி 25-29, ஹைதராபாத்


2வது டெஸ்ட்: இந்தியா - இங்கிலாந்து, பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம்


3வது டெஸ்ட்: இந்தியா - இங்கிலாந்து, பிப்ரவரி 15-19, ராஜ்கோட்


4வது டெஸ்ட்: இந்தியா - இங்கிலாந்து, பிப்ரவரி 23-27, ராஞ்சி


5வது டெஸ்ட்: இந்தியா - இங்கிலாந்து, மார்ச் 7-11, தர்மசாலா


 


மேலும் படிக்க: Sunil Gavaskar: தார்ப்பாய் கொண்டு மூடும் அளவுக்கு கூட பணம் இல்லையா..? தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை சாடிய கவாஸ்கர்!


 


மேலும் படிக்க: Happy Birthday Viswanathan Anand: 5 முறை உலக சாம்பியன்.. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர்.. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று..!