நடப்பாண்டில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதற்கு தயாராகி வருகின்றனர். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தி வருகிறது.


நேபாளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி:


கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் வீழ்த்த முடியாத ஜாம்பவனாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத அளவிற்கு பலவீனமான அணியாக மாறிவிட்டது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் ஆடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


சமீபகாலமாக, மற்ற அணிகளை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் கிரிக்கெட் ஆடி வரும் நேபாள அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி முதன்முறையாக விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று விமானம் மூலமாக காத்மாண்டுவிற்கு வந்தனர்.


சரக்கு வேனில் ஏற்றப்பட்ட உடைமைகள்:


விமான நிலையத்திற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் உடைமைகள் குட்டி யானை எனப்படும் மினி லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது. இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அழைத்துச் செல்ல தனியாக ஏசி வசதியுள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.






இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற ஒரு உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியின் வீரர்களின் உடைமைகளை இவ்வாறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி வேனில் ஏற்றிச் சென்றதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


சிக்கந்தர் ராசா கண்டனம்:


ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் ராசா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் சிறந்த சிகிச்சையை நேபாளத்தால் அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் ரோஸ்டன் சேஸ், அலிக் அதானசே, ஃபாபியன் ஆலன், கதீம் ஆலென், ஜோஸ்வா பிஷெப், கீசி கார்ட்டி, ஜான்சன் சார்ல்ஸ், மார்க் டெயல், ஆண்ட்ரே ப்ளெட்சர், மேத்யூ போர்ட், மெக்காய், மோத்தி, கீமோ பால், தாமஸ், வால்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


இவர்களில் சேஸ், அதானசே, பாபியன் ஆலன், கீமோ பால், வால்ஷ் ஆகியோர் டி20 உலகக்கோப்பையில் ஆட வாய்ப்புள்ளது. நேபாளத்தில் டி20 வடிவத்தில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது.


மேலும் படிக்க: Watch Video: "தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!


மேலும் படிக்க: SRH vs RCB Match Innings: SRH-ஐ ஆல் அவுட் ஆக்கிய RCB; 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!