உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நேரம் ( 19 மணி நேரம் 56 நிமிடங்கள்) களத்தில் நின்ற வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் இந்திய அணி வீரர் விராட் கோலி. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஆஸ்திரேலியா சாம்பியன்:


கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான ‘நரேந்திர மோடி மைதானத்தில்’ தொடங்கிய இந்த தொடர் நேற்று (நவம்பர் 19) அதே மைதானத்தில் முடிவுற்றது.


முன்னதாக, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது ஆஸ்திரேலிய அணியின் வெற்றி. அதன்படி, நேற்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.


விராட் கோலி எனும் கிங்:


இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற தவறினாலும், ஒவ்வொரு இந்திய அணி வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். அந்த வகையில் லீக் போட்டிகள், அரையிறுதி என 10 இன்னிங்களில் இந்தியா தான் தொடர் வெற்றிகளை பெற்றது. 


அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கிங் கோலி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி. தனேக்கே உரித்தான அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை இந்த தொடரில் முறியடித்தார்.


அந்த வகையில், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் (765 ரன்கள்), அதிக அரைசதம் அடித்த வீரர் ( 6 அரைசதம்) , அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனைகளை படைத்த அவர் 3 சதங்களையும் விளாசினார்.


அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (50) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.மேலும், இந்த உலகக் கோப்பை தொடரின், ’தொடர் நாயகன்’ விருதையும் பெற்றார்.


அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர்:


இச்சூழலில் தான் மேலும் ஒரு சாதனை விராட் கோலியின் பக்கம் சேர்ந்துள்ளது. அதன்படி, இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் விராட் கோலி. 11 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 19 மணி நேரம் 56 நிமிடங்கள் களத்தில் நின்ற அவர் எதிரணி வீரர்களை மிராட்டியுள்ளார். விராட் கோலி மட்டும் தான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக நேரம் களத்தில் நின்ற பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Mohammed Shami: இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள்.. எதிரணியை மிரள வைத்த முகமது ஷமி..!


மேலும் படிக்க: Virat Kohli: 3 சதம், 6 அரை சதங்கள்... சச்சின் சாதனையை முறியடித்த ‘கிங்’ கோலி.. தொடர் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்!