6-வது முறையாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியினர், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் உலகக் கோப்பையுடன்  கப்பலில் சவாரி செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலிய அணி:


கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானமான ‘நரேந்திர மோடி மைதானத்தில்’ தொடங்கிய இந்த தொடர் நேற்று (நவம்பர் 19) அதே மைதானத்தில் முடிவுற்றது.


முன்னதாக, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாவது முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது ஆஸ்திரேலிய அணியின் வெற்றி. அதன்படி, நேற்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.




 


சபர்மதி ஆற்றில் சவாரி:


இந்த  உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணியிடம் அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. இச்சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அடுத்து விளையாடிய அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 


 






இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மற்றும் அந்த அணியினர் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.


முன்னதாக, இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இச்சூழலில் தான் அங்குள்ள பிரபலமான ஆறுகளில் ஒன்றான சபர்மதி ஆற்றில் ஆஸ்திரேலிய அணியினர் உலகக் கோப்பையுடன் கப்பலில் சவாரி செய்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.


மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சபர்மதி ஆற்றங்கரையில் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேபோல், அந்த அணியினரும் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியினர் சபர்மதி ஆற்றங்கரையில் சவாரி செய்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 


மேலும் படிக்க: Mohammed Shami: இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள்.. எதிரணியை மிரள வைத்த முகமது ஷமி..!


 


மேலும் படிக்க: Selvaraghavan: நாடு தோற்பதை பார்க்க முடியவில்லை.. நெஞ்சம் உடைந்து சிதறியது.. செல்வராகவன் கண்ணீர்மல்க பதிவு!