2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை விராட் கோலி பெற்றுள்ளார்.


சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும்  கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.


விருதுகளை வென்று குவிக்கும் கோலி:


இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு விராட் கோலி ஐசிசி விருது வென்றார். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஐசிசி விருதையும் வென்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருது வென்றார். 2024 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருது வென்றார். 


அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் 27 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய அவர் 6 அரைசதம் மற்றும் 8 சதம் என 1377 ரன்களை குவித்தார். அதோடு கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தமாக 765 ரன்கள் எடுத்தார்.


நான்காவது முறையாக சாதனை:






இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக்கொண்டார். அந்தவகையில் 4 வது முறையாக இந்த விருதை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


விராட் கோலிக்கு தற்போது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர். முன்னதாக இந்திய அணி தங்களது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் களம் காண இறக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Watch Video: ஆல் ஏரியா ஐயா கில்லிடா!.. கிரிக்கெட் பேட்டில் கோல்ஃப் ஆடிய ரிஷப் பண்ட்! வைரல் வீடியோ!


மேலும் படிக்க: Suryakumar Yadav: உடல் எடையை குறைத்த சூர்யகுமார் யாதவ்? எப்படி நடந்தது இந்த மாற்றம்?