உலகக் கோப்பையில் நமீபியா பந்துவீச்சாளர் ரூபன் ட்ரம்பெல்மேன் சிறப்பாக செயல்பட்டு அசத்தி, தனது பெயரில்  ஒரு சிறப்பு சாதனை படைத்துள்ளார். இந்த சிறப்பு சாதனையை இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரால் கூட செய்ய முடியவில்லை. 

இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் ஓமனுக்கு எதிராக முதல் ஓவரை வீசினார் ரூபன் ட்ரம்பெல்மேன். இவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஓமன் தொடக்க வீரர் காஷ்யப்பை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். அதனை தொடர்ந்து, தான் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ட்ரம்பெல்மேன், ஓமன் கேப்டன் அகிப் இல்யாஸை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்து அசத்தினார். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இரண்டாவது முறையாக டிரம்பெல்மேன் பெற்றார். இதற்கு முன்பும் ஒருமுறை இந்த சாதனையை செய்துள்ளார். இவருக்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பையின் முதல் ஓவரில் முதல் பந்திலேயே 3 பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் கூட இல்லை. 

இதுபோக, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும், முதல் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் ட்ரம்பெல்மேன் படைத்துள்ளார். 

டி20 உலகக் கோப்பையின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய சாதனையை வங்கதேச பந்துவீச்சாளர் மஷ்ரஃப் முர்சாட்டா செய்தார். 2014ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல்  விக்கெட்டை எடுத்தார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷபூர் ஜத்ரானும் இந்த  அற்புதத்தை செய்துள்ளார். 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் ஹாங் காங்க்கு எதிராக முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

இதற்குப் பிறகு, 2021 இல் ஸ்காட்லாந்துக்கு எதிராக நமீபிய பந்துவீச்சாளர் டிரம்பெல்மேன் முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். தற்போது ஓமனுக்கு எதிராகவும் இந்த சாதனையை செய்துள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் பந்தில் இந்திய அணியின் எந்த பந்துவீச்சாளராலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. 

முதல் ஓவரில் அதிக விக்கெட்கள்: 

டி20 உலகக் கோப்பையை தவிர்த்து, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் அதிக விக்கெட்களை  வீழ்த்திய சாதனையை இந்தியாவின் புவனேஷ்வர் குமார் மற்றும் பாகிஸ்தானின்  ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

மேலும், முகமது அமீர் , சோஹைல் தன்வீர் மற்றும் டேவிட் வில்லி போன்றவர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் உள்ளனர். 

டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள்

பந்துவீச்சாளர்கள்

விக்கெட்டுகள்

ஷஹீன் ஷா அப்ரிடி

46

புவனேஷ்வர் குமார்

46

முகமது அமீர்

41

சோஹைல் தன்வீர்

39

டேவிட் வில்லி

37