மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்ற போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது. மேலும் , இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 ஓவர்கள் வீசி அதில் 1 ஓவர் மெய்டன் செய்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 


முன்னதாக, அந்த போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 94 பந்துகள் களத்தில் நின்று 88 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


சுயநலமாக விளையாடுகிறார்:


விராட் கோலி சுயநலமாக விளையாடுவதாக பல முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.  இதனைடையே பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நாட்டு ரசிகர் ஒருவரும் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.


ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம், “விராட் கோலியை இப்படி கூறுவது தவறானது. அவர் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுபவர்” என்று பதிலளித்தார்.



மேலும், ”விராட் கோலி விளையாடும் போது எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியும். ரன் சேஸிங்கின் போது அவரது மதிப்பு முழுமையானதாக இருக்கும். எந்த சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்பது கோலிக்கு நன்றாக தெரியும்.  


அவர் ஒரு சிறப்பான வீரர். அவரை விட சிறந்த வீரார் யாரும் இல்லை. அப்படிப்பட்ட வீரரை தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று இமாத் வாசிம் கூறினார்.


 






விராட் கோலியுடன் ஒப்பிடுவது முட்டாள்தனம்:


இந்த விவாதத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீர், விராட் கோலியை மற்றவர்களுடன் ஒப்பிடுவது முட்டாள் தனமானது என்று கூறினார்.


அப்போது பேசிய அவர், “மக்கள் ஏன் விராட் கோலியை மற்றவர்களுடன் ஒப்பிடுகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த ஒப்பீடு முட்டாள்தனமானது. மேலும், ஒரு வீரரின் நோக்கத்தைத் தான் நீங்கள் பார்க்க வேண்டும். அவர் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.” என்று கூறினார்.


அதெபோல் விவாத்தில் பங்குபெற்ற மாற்றொரு பாகிஸ்தான் அணி வீரரான அப்துல் ரசாக்கும் இதே கருத்தை கூறினார். பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலிக்கு சப்போர்ட்டாக பேசிய இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


மேலும் படிக்க: Most Hundreds in WCC : உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்!


 


மேலும் படிக்க: Team India Records: உச்சகட்ட ஃபார்மில் ஷமி - கோலி டூ ரோகித்.. உலகக் கோப்பையில் இந்தியா கொட்டிக் குவித்த சாதனைகள்