India vs Sri Lanka: இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி, உலகக் கோப்பையில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி சார்பில் மட்டுமின்றி, வீரர்களும் தனிப்பட்ட முறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். 



  • நடப்பு உலகக் கோப்பையில் முதல் அணியாக இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது 

  • உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்படையில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

  • உலகக் கோப்பை வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெற்ற இரண்டாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி பெற்ற நான்காவது பெரிய வெற்றி இதுவாகும்

  • இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற ஜாகிர் கானின் (44) சாதனையை ஷமி (45) முறியடித்துள்ளார்.

  • ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக முறை 5-விக்கெட்ஸ் எடுத்த வீரர் என்ற அஸ்திரேலியாவின் ஸ்ட்ரார்க்கின் (3) சாதனையை ஷமி சமன் செய்துள்ளார். நடப்பு தொடரில் மட்டுமே இவர் இரண்டு முறை 5 விக்கெட்ஸ் எடுத்துள்ளார்.

  • ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி பெற்ற முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

  • ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் பெற்றுள்ளார்

  • உலகக் கோப்பையில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 7 முறை 4-விக்கெட்ஸ்களை பதிவு செய்துள்ளார். வேறு எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை.

  • இன்றைய போட்டியின் மூலம் நடப்பாண்டில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கோலி பூர்த்தி செய்தார்.  இதன் மூலம் 8 முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை விளாசிய கோலி, சச்சினின் (7) முந்தையை சாதனையை முறியடித்துள்ளார்.

  • ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிகமுறை 5 விக்கெட்ஸ் எடுத்த வீரர் என்ற பெருமையை ஷமி (4) பெற்றுள்ளார்.

  • ஒருநாள் கிரிகெட் வரலாற்றில் அதிகமுறை அடுத்தடுத்த 3 போட்டிகளில் 4+ விக்கெட்ஸ் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் ஷமி (2 முறை) இரண்டாவது இடம் பிடித்துள்ளார். வகார் யூனிஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

  • இந்தியாவிற்கு எதிராக ஒரு அணி எடுத்த இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும். முதலிடத்திலும் இலங்கை தான் உள்ளது.

  • உலகக் கோப்பையில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி

  •