உலகக் கோப்பை 2023ல் இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில், அதிக ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் விராட் கோலி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிராக 88 ரன்கள் எடுத்த கோலி, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் டாப் 5 க்குள் நுழைந்தார்.
மறுபுறம், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். நேற்று நடந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்தநிலையில், இந்த உலகக் கோப்பையின் முக்கிய புள்ளி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
- அதிகபட்ச ஸ்கோர்: அக்டோபர் 7-ம் தேதி நடந்த ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. இதுவே இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.
- மிகப்பெரிய வெற்றி: கடந்த அக்டோபர் 25 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
- அதிக ரன்கள்: இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 545 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக விராட் (442) 2வது இடத்திலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா (415) 3வது இடத்திலும் உள்ளனர்.
- அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: இந்த சாதனையும் குயின்டன் டி காக் பெயரில் உள்ளது. கடந்த அக்டோபர் 24 அன்று, வங்கதேசத்திற்கு எதிராக வான்கடேவில் 174 ரன்கள் எடுத்தார்.
- அதிக சதங்கள்: இங்கேயும் டி காக் தான் நம்பர்-1. இந்த உலகக் கோப்பையில் நான்கு சதங்கள் அடித்து பல சாதனைகளையும் குவித்து வருகிறார்.
- அதிக சிக்ஸர்கள்: ரோஹித் சர்மா இதுவரை 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் (19) 2வது இடத்திலும், டி காக் (18) 3வது இடத்திலும் உள்ளனர்.
- அதிக விக்கெட்டுகள்: இலங்கையின் தில்ஷன் மதுஷங்க 18 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா, பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி, தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சின் ஆகியோர் உள்ளனர். மூவரும் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், குறைந்த ரன்களை விட்டு கொடுத்ததன் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களை பகிர்த்துள்ளனர்.
- சிறந்த பந்துவீச்சு இன்னிங்ஸ்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நவம்பர் 2ம் தேதியான நேற்று இலங்கைக்கு எதிராக வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
- சிறந்த சராசரி : தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த உலகக் கோப்பையில் 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.
- மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்: நியூசிலாந்தின் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 273 ரன்கள் எடுத்தனர்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
- குவிண்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) - 7 இன்னிங்ஸில் 545 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 7 இன்னிங்ஸில் 442 ரன்கள்
- ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - 415 ரன்கள்
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 6 இன்னிங்ஸ்களில் 413 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 7 இன்னிங்ஸில் 402 ரன்கள்
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்
- தில்ஷன் மதுஷங்க (இலங்கை) - 18 விக்கெட்டுகள்
- ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) - 16 விக்கெட்கள்
- மார்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - 16 விக்கெட்கள்
- ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) - 16 விக்கெட்கள்
- ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 15 விக்கெட்டுகள்
உலகக் கோப்பை 2023: அதிகபட்ச ஸ்கோர் (இன்னிங்ஸ்)
- குயின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா) - 174 ரன்கள் vs வங்கதேசம்
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 163 ரன்கள் vs பாகிஸ்தான்
- டெவோன் கான்வே (நியூசிலாந்து) - 152* vs இங்கிலாந்து
- டேவிட் மாலன் (இங்கிலாந்து) - 140 vs வங்கதேசம்
- ரஸ்ஸி வான் டெர் டுசென் (தென்னாப்பிரிக்கா) - 133 vs நியூசிலாந்து
2023 உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சு
- முகமது ஷமி (இந்தியா) - 5/18 vs இலங்கை
- ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 5/54 vs ஆஸ்திரேலியா
- முகமது ஷமி (இந்தியா) - 5/54 vs நியூசிலாந்து
- மிட்சல் சான்ட்னர் (நியூசிலாந்து) - 5 /59 vs நெதர்லாந்து
- தில்ஷன் மதுஷங்க (இலங்கை) - 5/80 vs இந்தியா