இந்திய கிரிக்கெட் அணி:


இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்குத்தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியையும் பெரும் ரசிகர்கூட்டம் மைதானத்திற்கு சென்று பார்த்தது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் செல்போன் மூலமாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.


அதற்கான காரணம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பதால் தான். அதற்கு ஏற்றார் போல் இந்திய கிரிக்கெட் அணியும் தங்களின் செயல்பாடுகள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பையை தவறவிட்டாலும் எல்லா தொடர்களிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறது. 


ஆசியாவில் இந்திய அணியின் ஆதிக்கம்:


இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னதாகவே தொடரை கைப்பற்றிவிட்டது. அதன்படி கடந்த 12 வருடங்களாக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையாத அணி என்ற பெருமையை தக்கவைத்தது. இதனிடையே, மார்ச் 7 ஆம் தேதி இந்தியா  மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.






அதாவது கடந்த 12 வருடங்களாக ஆசியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 20 முறை தொடரை வென்று இந்திய அணி அசத்தியிருக்கிறது. அதாவது கடந்த 12 வருடங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆசியாவில் மட்டும் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 46 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல், 8 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது. 5 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!