ஐ.பி.எல் தொடர்:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
அல்சாரி ஜோசப்பின் அசத்தல் சாதனை:
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் விளையாடியவருமான அல்சாரி ஜோசப் தான் ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரராக இருக்கிறார். முன்னதாக, சர்வதேச டெஸ்ட் போட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் அறிமுகமானாவர் தான் இந்த அல்சாரி ஜோசப். அதேபோல், கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலாம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 3.4 ஓவர்கள் வீசிய இவர் 1 ஓவரை மெய்டன் செய்த இவர் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருப்பவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் வீசிய தன்வீர் 14 ரன்களை விட்டுக்கொடுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேபோல் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய வீரரும்,சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு விளையாடிய ஆடம் ஜம்பா. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர் அனில் கும்ப்ளே. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு விளையாடிய அனில் கும்ப்ளே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரகா நடைபெற்ற போட்டியில் 3.1 ஓவர்கள் வீசி 1 ஓவர் மெய்டன் செய்து 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தபட்டியலில் 5 வது இடத்தில் இருப்பவர் ஆகாஷ் மத்வால். கடந்த 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!