பிசிசிஐ 2023-24 ஆண்டுக்காக புதிய மத்திய ஒப்பந்ததை நேற்று வெளியிட்டது. இந்த மத்திய ஒப்பந்ததில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரு சில அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல், சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற முக்கிய வீரர்களை புதிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. 


இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களின் வாய்ப்புகளும், கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவு வருகிறதா..? சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருந்துள்ளனர். அதேசமயம், யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். அப்படி இருக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 






இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில், சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக, ரஜத் படிதார் மற்றும் சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்களின் வருகையின் மூலம் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு மீண்டும் வருவது பெரும் சவாலாக உள்ளது. 


சேதேஷ்வர் புஜாராவுக்கு சுமார் 36 வயது. இது தவிர, மோசமான பார்மிலும் அவர் போராடி வந்தார். அதே நேரத்தில், அஜிங்க்யா ரஹானேவுக்கும் 35 வயதுக்கு மேல். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுக்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்தது. இதன் மூலம் பிசிசிஐ கிட்டத்தட்ட தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.


சமீபத்தில் சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய புஜார, 2 இரட்டை சதம் உள்பட 829 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


யுஸ்வேந்திர சாஹல் நிலைமை: 


யுஸ்வேந்திர சாஹல் நீண்ட காலமாக இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால் சமீப காலமாக இந்திய அணியில் அவரது இடம் கேள்விகுறியாகவே உள்ளது. 33 வயதான யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 72 ஒருநாள் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில், ஒருநாள் போட்டியில் 121 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால் தற்போது ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளித்து வருகிறது. டி20 வடிவத்தில் ரவி பிஷ்னோய் தனது முத்திரையைப் பதித்த விதத்தைப் பார்க்கும்போது, ​​யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.