டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு நடைபெறுகிறது. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் இணைந்து இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது. இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.






இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது?


ஜூன் 1ம் தேதி உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ம் தேதி நடக்கிறது.


டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி குழு ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. உலகக்கோப்பைத் தொடக்கப் போட்டியில் அமெரிக்கா – கனடா ஆகிய அணிகள் மோதுகின்றன.


முதல் அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 26ம் தேதி நடக்கிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி டிரினிடாட்டில் ஜூன் 27ம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி பார்படாஸில் வரும் ஜூன் 29ம் தேதி நடக்கிறது.


ஏ பிரிவு:


ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள இந்திய அணி அயர்லாந்து அணியுடன் ஜூன் 5ம் தேதியுடன் தன் முதல் போட்டியில் ஆடுகிறது. பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 9ம் தேதி ஆடும் இந்திய அணி, அமெரிக்காவுடன் ஜூன் 12ம் தேதி ஆடுகிறது. ஏ பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியுடன் வரும் ஜூன் 15ம் தேதி விளையாடுகிறது. இந்திய அணி லீக் போட்டியில் ஆடும் அனைத்து ஆட்டங்களும் அமெரிக்காவில் நடக்கிறது.




மொத்தம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் 5 அணிகள் வீதம் ஏ, பி, சி. டி என அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது.


பி பிரிவு:


பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.


சி பிரிவு:


சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம்பெற்றுள்ளன.


டி பிரிவு:


தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.


மேலும் படிக்க:  T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி அயர்லாந்துக்கு எதிராக... பாகிஸ்தானுடன் எப்போது தெரியுமா?


மேலும் படிக்க: Babar Azam: டெஸ்ட் வாழ்க்கையில் சரிகிறதா சாம்ராஜ்யம்..? தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் பாபர் அசாம்..!