இந்திய கிரிக்கெட் அணி நேற்றைய டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் ஆல் அவுட் செய்து புத்தாண்டு பயணத்தை சிறப்பாகவே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐசிசி கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.


டி20 உலகக் கோப்பை 2024 தொடங்க இன்னும் 5 மாதங்கள் இருந்தாலும், அதனை பற்றியே பேச்சு இப்போதே படை எடுக்க தொடங்கி விட்டது. இந்த பெரிய அளவிலான போட்டியை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துவது நம் அனைவரும் அறிந்ததே. இதற்கான அட்டவணையும் விரைவில் வெளியாக உள்ளது. 


அதன்படி, டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் ஜூன் 5ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தேதியும் ஜூன் 9ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


ஜூன் 4 ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்கும் எனவும், ஜூன் 5ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாடும் என்று ஸ்போர்ட்ஸ் டாக் அறிக்கை கூறியுள்ளது. இந்திய அணியின் குரூப் ஸ்டேஜின் மூன்று போட்டிகள் நியூயார்க்கில் நடைபெற வாய்ப்புள்ளது.


இந்திய அணியின் மாதிரி அட்டவணை



  • ஜூன் 5 - Vs அயர்லாந்து, நியூயார்க்

  • ஜூன் 9 - VS பாகிஸ்தான், நியூயார்க்

  • ஜூன் 12 - VS அமெரிக்கா, நியூயார்க்

  • ஜூன் 15 - VS கனடா, புளோரிடா

  • ஜூன் 20 - Vs C-1 (நியூசிலாந்து) பார்படாஸ்

  • ஜூன் 22 - Vs இலங்கை, ஆன்டிகுவா

  • ஜூன் 24 - Vs ஆஸ்திரேலியா, செயின்ட் லூசியா

  • ஜூன் 26 - 1வது அரையிறுதி, கயானா

  • ஜூன் 28 - 2வது அரையிறுதி, டிரினிடாட்

  • ஜூன் 29 - இறுதிப்போட்டி, பார்படாஸ் 


டி20 உலகக் கோப்பை 2024 எப்படி நடைபெறும்..? 


டி20 உலகக் கோப்பை 2024ல் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும். தலா 5 அணிகள் கொண்ட நான்கு குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல்-2 அணிகள் சூப்பர்-8 கட்டத்தை எட்டும். தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். இங்கு ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். அதாவது இந்த நிலையிலும் ஒவ்வொரு அணிக்கும் மூன்று போட்டிகள் இருக்கும். இதன் பிறகு டாப்-2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.


டி20 உலகக்கோப்பை இந்தாண்டு யார் நடத்துக்கிறார்கள்..? 


2024 டி20 உலகக் கோப்பையை இந்தாண்டு வெஸ்ட் இண்டீஸும், அமெரிக்காவும் கூட்டு ஹோஸ்டிங்கின் கீழ் நடத்தவுள்ளது. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, இந்த உலகக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளும் ஜூன் 4 முதல் 30 வரை நடைபெறும். இதற்காக அனைத்து அணிகள் தங்கள் அணிகளை ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கத் தொடங்கும்.


டி20 உலகக் கோப்பை 2024-க்கு தகுதிபெற்ற 20 அணிகளின் விவரம்: 


ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா (PNG), ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, உகாண்டா, அமெரிக்கா (அமெரிக்கா) ) மற்றும் வெஸ்ட் இண்டீஸ்