ஆஸ்திரேலியாவில் டி20 உலககோப்பை போட்டிகளின் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
பேட்டிங் :
நடப்பு உலககோப்பை டி20 தொடரை பொறுத்த வரை இந்த தொடர் தொடங்கியது முதலே நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஃபின் ஆலன் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அபார பேட்டிங்கால் நியூசிலாந்து அசத்தலான வெற்றியை பெற்று வருகிறது. அவர் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 226.3 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் வீரர்கள் பட்டியல்
- ஃபின் ஆலன் – 226.3
- குயின்டின் டி காக் - 188.1
- ரோசோவ் - 187.9
- சூர்யகுமார் யாதவ் - 178.7
- ஸ்டோய்னிஸ் - 177.2
- காம்பெர் - 170
- வான் மீகெரென் - 166.7
- வைஸ் - 157.1
பந்துவீச்சு :
பந்துவீச்சிலும் மற்ற நாட்டு பந்துவீச்சாளர்களை காட்டிலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுதி சிறப்பாக வீசி வருகிறார். நடப்பு தொடரில் அவரது எகானமி ரேட் 2.91 ஆக வீசி சிறப்பாக பந்துவீசியுள்ளார் எகானாமி ரேட் அடிப்படையில் சிறந்த பந்துவீச்சு விவரம்
- டிம் சவுதி – 2.91
- ரஷீத் கான் - 4.25
- ஸ்டோக்ஸ் – 4.26
- நோர்ட்ஜே - 4.52
- போல்ட் - 4.62
- ஹோல்டர் - 4.74
மேலும் படிக்க : T20 World Cup 2022: உலகக் கோப்பையில் இருந்து விலகும் தினேஷ் கார்த்திக்..? புவனேஷ்வர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
மேலும் படிக்க : Watch Video: ஸ்டொய்னிஸ் வானத்தை நோக்கி ஏவி விட்ட பந்து.. பறந்து தாவி தடுத்த மெக்கார்த்தி.. வைரலாகும் வீடியோ!