SA Vs AFG LIVE Score: ஆஃப்கானிஸ்தானை ஊதித் தள்ளி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
SA Vs AFG World Cup 2023 Live Updates: ஆஃப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்ஸ்களுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வன் டர் டசனுக்கு வழங்கப்பட்டது.
47.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் சேர்த்து வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
47 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 231 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி 46 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 212 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 33 ரன்கள் தேவைப்படுகின்றது.
தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 36 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்படுகின்றது.
44 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 209 ரன்கள் சேர்த்துள்ளது.
43 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 203 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 42 பந்துகளில் 42 ரன்கள் தேவை.
தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி நிதானமாகவே முன்னேறி வருகின்றது.
42 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டினை இழந்து 198 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 47 ரன்கள் தேவை.
கடைசி 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி பெற 53 ரன்கள் தேவைப்படுகின்றது.
40 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்துள்ளது.
39 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டினை இழந்து 190 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
38 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மில்லர் தனது விக்கெட்டினை நபி பந்தில் இழந்து வெளியேறினார்.
37 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 67 ரன்கள் மட்டுமே தேவை.
35 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தென்னாப்பிரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான வான் டர் டசன் 66 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
34 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது தென்னாப்பிரிக்கா.
33 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் சேர்த்து நிதானமாகவே விளையாடி வருகின்றது.
29.4 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டினை இழந்த்ஜு 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவை.
28 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 105 ரன்கள் தேவை.
அதிரடி பேட்ஸ்மேன் ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை 28வது ஓவரில் ரஷித் கான் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இவர் 13 பந்தில் 10 ரன்கள் சேர்த்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 27 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 106 ரன்கள் தேவை.
3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 26 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 113 ரன்கள் தேவை.
24 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டினை இழந்து 126 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
32 பந்தில் 25 ரன்கள் சேர்த்த மார்க்ரம் போட்டியின் 24வது ஓவரின் முதல் பந்தில் ரஷித் கானிடம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
23 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது.
மார்க்ரம் மற்றும் வென் டர் டசன் கூட்டணி பொறுப்புடன் விளையாடி 57 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
22 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 114 ரன்கள் சேர்த்து சிறப்பாக வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
21 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 105 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அணியின் ரன்ரேட் தற்போது 5ஆக உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 20.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. வெற்றிக்கு இன்னும் 160 ரன்கள் தேவை.
17 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டினை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த டிகாக் தனது விக்கெட்டினை போட்டியின் 14வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 41 ரன்கள் சேர்த்திருந்தார். இவரது விக்கெட்டினை நபி கைப்பற்றினார்.
போட்டியின் 12வது ஓவரை வீசிய நபி அந்த ஓவரை மெய்டனாக வீசினார். இந்த போட்டியில் ஆஃப்கான் தரப்பில் வீசப்பட்ட முதல் மெய்டன் ஓவர் இதுதான்.
11 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டினை இழந்து விக்கெட் 64 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் பவுமா தனது விக்கெட்டினை 23 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.
பவர்ப்ளே முடிவில் அதாவது முதல் 10 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றது.
அதிரடியாக விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 9.2 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியும் 8 ஓவர்கள் முடிவில் இதே நிலையில்தான் இருந்தது.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் குயிண்டன் டிகாக் பவுண்டரிகளை பறக்கவிட்டு வருகின்றார். இவர் இந்த தொடரில் ஏற்கனவே 4 சதங்கள் விளாசியுள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்து சிறப்பாக இலக்கைத் துரத்தி வருகின்றது.
6 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த தொடர் முழுவதும் சேஸிங்கில் சொதப்பி வரும் தென்னாப்பிரிக்கா அணி 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகின்றது. 3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிவேகப் பந்து வீச்சாளர் கோட்ஸீ 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவர் அதிகபட்சமாக மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.
இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 6 கேட்ச்சுகள் பிடித்து சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளார்.
இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது.
49 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வரும் ஒமர்சாய் இதுவரை 99 பந்துகளை எதிர்கொண்டு 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
அதிரடியாக சிக்ஸர் விளாசிய முஜீப் தனது விக்கெட்டினை 48வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை கோட்ஸீ கைப்பற்றினார்.
8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி 47 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் நூர் முகமது தனது விக்கெட்டினை 46வது ஓவரின் கடைசி பந்தில் இழந்து வெளியேறினார். இந்த பந்தை கோட்ஸீ 149 கீலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.
45.2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது தரப்பில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
44 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
42 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டினை இழந்து 182 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தற்போதைய ரன்ரேட் 4.33ஆக உள்ளது.
41 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டினை இழந்து 176 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டினை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அஃப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கையாக இருந்த ரஷித் கான் தனது விக்கெட்டினை போட்டியின் 38வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மதுல்லா ஒமர்சாய் தனது அரைசதத்தினை 71 பந்தில் எட்டினார்.
35 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டினை இழந்து 150 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
34.3 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தற்போதைய ரன்ரேட் 4.43ஆக உள்ளது.
32 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி தனது விக்கெட்டினை போட்டியின் 28வது ஓவரின் 4வது பந்தில் இழந்து வெளியேறினார். ஆஃப்கானிஸ்தான் அணி 116 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
27 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
26.5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது 5வது விக்கெட்டினை இழந்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து, 4 ரன்ரேட்டுடன் விளையாடி வருகின்றது.
24.5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி 24 ஓவர்கள் முடிவில் தனது 4வது விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்காக நிதானமாக ஆடி வந்த ரஹ்மத் ஷா 26 ரன்களில் அவுட்டானார்.
23 ஓவர்கள் முடிவில் ஆஃப்கனிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 5வது ஓவரில் சிக்ஸர் விளாசப்பட்ட பின்னர் போட்டியில் மேற்கொண்டு சிக்ஸர் விளாசப்படவில்லை. 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் போட்டியின் இரண்டாவது சிக்ஸர் அஸ்மதுல்லா மூலம் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளனர்.
17 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட் 3.79 என்ற நிலையில் உள்ளது.
14 ஓவ்ர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 51 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்து தடுமாற்றமாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 11வது ஓவரின் 5வது பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது 3வது விக்கெட்டினை இழந்துள்ளது. ஹஸ்மதுல்லா ஷகிதி தனது விக்கெட்டினை மஹாராஜ் பந்தில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 9வது மற்றும் 10 வது ஓவரில் ஆஃப்கன் அணி ஒரு ரன் கூட எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த இரண்டு ஓவர்கள் ஆஃப்கான் தரப்பில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
10 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் சேர்த்து நெருக்கடியான நிலையில் உள்ளது.
போட்டியின் பத்தாவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது விக்கெட்டினை இழந்துள்ளது. கோட்ஸீ வீசிய ஓவரில் இப்ராஹும் ஜத்ரான் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
போட்டியின் 9வது ஓவரை வீசிய மஹராஜ் அந்த ஓவரில் ஒரு ரன்கூட விட்டுக்கொடுக்கவில்லை. அதேபோல் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி 41 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 9வது ஓவரின் முதல் பந்தில் குர்பாஸின் விக்கெட்டினை கைப்பற்றினார் மஹராஜ். இவர் இந்த போட்டியில் தனது முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
நிதானமாக விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்துள்ளது.
கோட்ஸீ வீசிய போட்டியின் 8வது ஓவரில் குர்பாஸ் பவுண்டரிகள் விளாசி மிரட்டி வருகின்றார்.
7 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் 6வது ஓவரை வீசிக்கொண்டு இருந்த நிகிடிக்கு காலில் காயம் ஏற்படவே, அந்த ஓவரை முடிக்க மார்க்கரம் பந்து வீசவுள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இந்த தொடரில் இந்த போட்டிதான் கடைசி லீக் போட்டி ஆகும்.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரில் ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 13-0.
2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
Background
SA Vs AFG World Cup 2023: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் தற்போது வரை 41 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா, தென்னாப்ரிக்கா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் தங்களது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. நியூசிலாந்து அணி நான்காவது இடத்தை கிட்டத்தட்ட்ர உறுதிசெய்து விட்ட நிலையில், சில கணக்குகளின் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் நூலிழை அளவு வாய்ப்பு இன்னும் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென்னாப்ரிக்கா, 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உடன் மோத உள்ளது.
தென்னாப்ரிக்கா - ஆப்கானிஸ்தான் மோதல்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தென்னாப்ரிக்கா அணி ஒன்றில் மட்டுமே தோல்வியுற்றுள்ளது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்ரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், ஆப்கான்ஸ்தான் அணி இன்றைய போட்டியில் மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை பெற்றால் மட்டுமே நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
பலம் & பலவீனங்கள்:
தென்னாப்ரிக்கா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அந்த அணியின் முக்கிய பலமாக இருக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் நெருக்கடி தந்து வருகின்றனர். அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னாள் கேப்டன் டிகாக், அந்த அணியின் பேட்டிங் தூணாக ஜொலிக்கிறார். அதேநேரம், கடைசி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறிப்பிடத்தகக்து. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சை கொண்டு ஜாலம் நிகழ்த்தி வருகிறது. பேட்டிங்கிலும் முன்கள வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு அணியாக சேர்ந்து முயற்சித்து வெற்றியை வசப்படுத்துவது ஆப்கானிஸ்தானின் கூடுதல் பலமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி வாய்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 1 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைகிறது. அதேநேரம் போட்டியின் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து நின்று ஆட வேண்டியது குறிப்பிடத்தக்கது.
உத்தேச அணி விவரங்கள்:
தென்னாப்ரிக்கா:
குயின்டன் டி காக் , டெம்பா பவுமா (கேட்ச்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ஆண்டிலே பெஹுலுக்வாயோ, ககிசோ ரபாடா மற்றும் தப்ரைஸ் ஷம்சி.
ஆப்கானிஸ்தான்:
ஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில் (Wk), ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக் மற்றும் நூர் அகமது
வெற்றி வாய்ப்பு: தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -