ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, எங்கு உள்ளது என்பது குறித்தும், அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டின் மழை நிலவரம் குறித்தும் தெரிந்து கொள்வோம்

Continues below advertisement

உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி:

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (18-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

 

அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:

18-12-2004:

வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இதர தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு,மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19-12-2014:

வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-12-2024 முதல் 24-12-2024 வரை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.