அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் 2020/21 பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் ஆடிய மராத்தான் இன்னிங்ஸ்சை இந்த தொகுப்பில் காண்போம்.


2020-21 தொடர்: 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையே  2020-21 நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர் இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடராக அமைந்து. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது, அதன் பின்னர் விராட் கோலி தனது மகள் பிறந்ததால் முதல் போட்டியுடன் நாடு திரும்பினார்.


இதையும் படிங்க பாஸ்: Ravichandran Ashwin Retirement : அந்த இறுதி நிமிடங்கள்! ஓய்வுக்கு முன் கோலியை கட்டிப்பிடித்த அஷ்வின்..


சிட்னி டெஸ்ட்:


இதனால் இந்திய அணியை அஜிங்கியா ரகானே வழிநடத்தினார், அடுத்ததாக மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது, இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி ஆஸ்திரேலிய 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது, கடினமான சிட்னி ஆடுகளத்தின் இறுதி நாளில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது என்பது கிடையாது. 


இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர், ஆனால் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் இந்திய 272/5 என்கிற ஸ்கோரில் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா அந்த போட்டியில் வெற்றிப்பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.


இதையும் படிங்க: R Ashwin: "முரளிதரனுக்கு அடுத்து அஸ்வின்தான்" கிரிக்கெட்டை கட்டியாண்ட மாயாஜால சுழல் சக்கரவர்த்தி!


முதுகு வலியுடன் போராடிய அஷ்வின்:


ஆனால் ரவிச்சந்திரன் அஷ்வினும் ஹனுமனா விஹாரியும் 6வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்ததனர். அஷ்வினுக்கு இந்த போட்டியில் முதுகு பகுதியில் காயம் ஏற்ப்பட்டது, அந்த காயத்துடனே வலியை பொருட்படுத்தாமல் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை சமாளித்து ஆடினார். இதில் பல பந்துகள் அவரது உடலை பதம் பார்த்தன இருப்பினும் விடாப்பிடியாக களத்தில் நின்று இந்திய அணியின் டிராவுக்காக விளையாடினார். மறுபக்கம் விஹாரி காலில் பெரிய காயத்துடன் விளையாடினார்.இருவரும் 42.1 ஓவர்கள் விளையாடி இந்திய அணிக்கு டிராவை தேடி தந்தனர். 






முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடந்த கடைசி மற்றும் கடைசி டெஸ்டில் அஸ்வின் வெளியேறினார். ஆனால் அவர் இல்லாத போதிலும், இந்தியா கப்பா கோட்டையை உடைத்து தொடரை 2-1 என கைப்பற்றியது.