Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Russia Cancer Vaccine: கேன்சர் தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள் (pre- clinical trials) கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரி கப்ரின் உறுதிப்படுத்தி உள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனமான TASS இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
Just In




தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
இந்த தடுப்பூசி ரஷ்யாவின் பல்வேறு ஆய்வு மையங்கள் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி ஆகும். 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த தடுப்பூசி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கிண்ட்ஸ்பர்க் கூறும்போது, ’’தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள் (pre- clinical trials) கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது’’ என்று தெரிவித்து இருந்தார்.
தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகள் சாத்தியமா?
ஒவ்வொரு கேன்சர் நோயாளிக்கும் ஒவ்வொரு மாதிரியான பாதிப்பு, மருந்து தேவை இருக்கும். அந்த வகையில் கேன்சர் தடுப்பூசி தனிப்பயன் கொண்ட வகையில் உருவாக்கப்படும். இதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படும். இதன்மூலம், தனித்த புற்றுநோய் தடுப்பூசி (personalised cancer vaccine) சாத்தியமாக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்துக்குள் கேன்சர் தடுப்பூசி
neural network computing என்ற தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுத்தப்படும். இதன்மூலம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள், கேன்சர் தடுப்பூசி உருவாக்கப்படும் என்றும் ரஷ்ய சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.