இரண்டாவது முறையாக சாம்பியன்:


நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.


இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் இவர்களது ஓய்வு அறிவிப்பு சோகத்தை ஏற்படுத்தியது. 


ரோஹித் - கோலி ஓய்வு குறித்து பேசிய ராஜீவ் சுக்லா:


இந்நிலையில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதன் மூலம் ஒட்டு மொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதை நான் பார்க்கிறேன். யார் ஓய்வு பெற விரும்புகின்றார்களோ அது அந்த வீரர்களின் தனிப்பட்ட விருப்பம்.இப்போது ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.


இதுவும் அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான்.  விராட் கோலிக்கும் உங்களுக்கும் ரோஹித் ஷர்மாவைத் தெரியும் என்பதால், இது முற்றிலும் அவர்களின் முடிவுதான்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ,"நம்முடைய வீரர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று தான்.


இதை நாம் அனைவரும் வரவேற்கிறோம். அவர்கள் ஒருநாள் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இருப்பார்கள். அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை" என்று  ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.


மேலும் படிக்க: IND vs SA Final T20 2024: பாண்டியா வீசிய கடைசி ஓவர்.. சூர்யகுமார் செய்த செயல்! ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம்!


மேலும் படிக்க: Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்த கிங் கோலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்