IND vs SA Final T20 2024: பாண்டியா வீசிய கடைசி ஓவர்.. சூர்யகுமார் செய்த செயல்! ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம்!

IND vs SA Final : ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

Continues below advertisement

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:

கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 29) இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அந்த வகையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Continues below advertisement

அதன்படி இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது சூர்யகுமார் யாதவின் கேட்ச் தான். அதாவது கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் பிடித்த கேட்ச் எப்படி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்ததோ அதே போன்ற சம்பவம் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் சூர்ய குமார் யாதவின் கேட்ச் மூலம் அமைந்திருக்கிறது. 


முன்னதாக தென்னாப்பிரிக்க 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது ஹென்ரிச் கிளாசென் களத்திற்கு வந்தார். அக்சார் படேல் வீசிய 15 வது ஓவரில் அவர் அடித்த ஒவ்வொரு பந்தும் இந்திய ரசிகர்களின் நெஞ்சில் இடிபோல் விழுந்தது. இந்திய அணிக்கு வெற்றி என்ற சூழலை அந்த ஒரு ஓவரிலேயே தங்கள் அணியின் பக்கம் திருப்பினார் கிளாசென். ஆனால் பின்னர் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கட்டுக் கோப்பாக தங்களது ஓவரை வீசினார்கள்.

ஹர்திக் பாண்டியா வீசிய ஓவர்.. சூர்யகுமார் யாதவ் செய்த செயல்:

இதனிடையே ஹர்திக் பாண்டியா வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தில் ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்படி கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசியவர் ஹர்திக் பாண்டியா. கிளாசனுக்கு பிறகு இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டேவிட் மில்லர். இந்நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது. அதாவது கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் பந்தை தூக்கி சிக்ஸ் அடிக்க முயன்றார். பந்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்றது.

அப்போது சூர்யகுமார் யாதவ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை பிடித்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில், பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லையை தாண்டி சென்றார்.பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார். இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டேவிட் மில்லர் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவ் பிடித்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கேட்ச் தான் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Continues below advertisement