ப்ரோ கபடி லீக் சீசன் 10-இன் 176-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் இன்று (டிசம்பர் 10)  தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது.


 இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு ஸ்ரீ கண்டீரவா உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ம் தேதி நடந்த கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-31 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி கேசிக்கு எதிராக வென்றது. மறுபுறம், பெங்கால் வாரியர்ஸ் கடந்த டிசம்பர் 7ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் டையில் ஈடுபட்டது.


பெங்கால் வாரியர்ஸ் வெற்றி:


இந்நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணியை தமிழ்தலைவாஸ் அணி இன்றைய போட்டியில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 48-38 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி தமிழ்தலைவாஸ் அணியை வீழ்த்தியது.


2 போட்டிகளில் 14 ரெய்டு புள்ளிகளை குவித்து ரெய்டர் மனிந்தர் சிங் இன்றைய போட்டியில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார். அந்தவகையில், 13 ரெய்ட் சென்று 3 போனஸுடன் 16 புள்ளிகளை பெற்றார்.  மற்றொரு வீரரான சுபம் ஷிண்டே 10  Tackle, ஒரு போனஸ் என்று மொத்தம் 11 புள்ளிகள் எடுத்தார். நிதிஷ் குமார் 4 ரைய்ட், 3 போனஸ் என மொத்தம் 7 புள்ளிகளை பெற்றார். 






மறுபுறம் தமிழ்தலைவாஸ் அணி சார்பில், நரேந்தர் ஹோஷியார் 9 ரைய்ட், 2 Tackle, 2 போனஸ் என்று 13 புள்ளிகளை எடுத்தார். அஜிங்யா பவர் 5 ரைய்ட், 3 போனஸ் என 8 புள்ளிகளை பெற்றார். ஆட்ட நேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.






பெங்கால் வாரியர்ஸ்:


Raid points: 26


Super raids : 2


Tackle points: 16


All out points: 6


Extra points: 2


தமிழ் தலைவாஸ்:


Raid points: 21


Super raids : 0


Tackle points: 10


All out points: 4


Extra points: 3


மேலும் படிக்க: Ind vs Sa t 20: நான் நிதானமாக விளையாடுவதற்கு காரணம் யார் தெரியுமா? ருதுராஜ் கெய்க்வாட் சொன்னது இவரைத்தானா!


மேலும் படிக்க: Gautam Gambhir: ’இந்த முறை உலகக் கோப்பையில் நடந்த ஒரு நல்ல விஷயம் இதுதான்’ : கெளதம் கம்பீர் அதிரடி