இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவர் பிரித்விஷா. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு தொடரில் ஆடி வருகிறார். இந்த நிலையில் நார்தம்படன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நார்தம்படன்ஷைர் – சோமர்செட் அணிகள் மோதின.


இதில் நார்தம்படன்ஷைர் அணிக்காக தொடக்க வீரராக பிரத்விஷா களமிறங்கினார். அவருடன் களமிறங்கிய எமிலியோ கே 30 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ரிகார்டோ நிதானமாக ஆடினார். ஆனால், பிரித்விஷா களமிறங்கியது முதலே அதிரடி காட்டினார்.


பிரித்விஷா மிரட்டல்:


பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பிரித்விஷாவால் நார்தம்பட்ன்ஷையர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறியது. அவருக்கு நிதானமாக ஆடி ஒத்துழைப்பு தந்த ரிகார்டோ 47 ரன்களில் அவுட்டானார். அப்போது, அந்த அணியின் ஸ்கோர் 26.6 ஓவர்களில் 175 ரன்னாக இருந்தது. அடுத்து ஒயிட்மேன் களமிறங்கினார்.




ஒயிட்மேனை மறுமுனையில் நிற்க வைத்துக்கொண்டு பிரித்விஷா அதிரடி காட்டினார். பிரித்விஷாவை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணியினர் திணறினர். 200 ரன்களை கடந்த நார்தம்படன்ஷையர் 300 ரன்களை கடந்தது. சதத்தை கடந்தும் பேட்டிங்கில் மிரட்டிக் கொண்டிருந்த பிரித்விஷாவிற்கு ஒத்துழைப்பு தந்த ஒயிட்மேன் அரைசதம் விளாசினார். அவர் 51 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். அப்போது, நார்தம்படன்ஷையர் 369 ரன்களை  எட்டியிருந்தது.


இரட்டை சதம்:


அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக பிரித்விஷா சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசுவதை மட்டும் நிறுத்தவில்லை. இதனால், பிரித்விஷா இரட்டை சதத்தை விளாசினார். கடைசி வரை அதிரடி காட்டிய பிரித்விஷா ஆட்டம் முடிய 3 பந்துகள் எஞ்சிய நிலையில், 153 பந்துகளில் 28 பவுண்டரி 11 சிக்ஸருடன் 244 ரன்கள் எடுத்து அவுட்டானார். பிரித்விஷாவின் அபாரமான ஆட்டத்தால் நார்தம்ப்டன்ஷையர் அணி 50 ஓவர்களில் 415 ரன்களை குவித்தது.


தொடர்ந்து ஆடிய சோமர்செட் அணியும் சவால் அளிக்கும் விதமாகவே ஆடினார்கள். அந்த அணியின் ஆண்ட்ரூ, சீன் டிக்சன், கர்டிஸ் கம்பர், லியோனார்ட் அதிரடி காட்டினாலும் அவர்களால் 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


பிரித்விஷாவின் புதிய வரலாறு:




இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய பிரித்விஷா புதிய வரலாறு ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒரே ஆண்டில் முச்சதம், இரட்டை சதம், விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். அது மட்டுமின்றி டி20 கிரிக்கெட் போட்டி சுழற்சி படி கடந்தாண்டு அக்டோபர் மாதம்தான் அசாம் அணிக்கு எதிராக டி20 போட்டியில் 134 ரன்களை படைத்திருந்தார்.


நடப்பாண்டின் ஜனவரி மாதம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடரில் அசாம் அணிக்கு எதிராக முச்சதம் விளாசினார். அந்த போட்டியில் அவர் 379 பந்துகளில் 49 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 383 ரன்களை விளாசினார்.   


ஒரு கிரிக்கெட் வீரர் தான் சதம் விளாசிய ஒரே ஆண்டுக்குள்ளே முச்சதம், இரட்டை சதம், சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெரிய வரலாறை பிரித்விஷா படைத்துள்ளார். பிரித்விஷா கடந்தாண்டு அக்டோபர் மாதம் சதம் விளாசிய பிறகு நடப்பாண்டில் அக்டோபர் மாதம் பிறப்பதற்குள் முச்சதம், இரட்டை சதத்தை விளாசியுள்ளார்.


மேலும் படிக்க: Watch Video: வீசப்பட்ட 20 பந்துகளில் 19 பந்துகள் டாட்.. வீழ்ந்த 3 விக்கெட்கள்.. அறிமுக போட்டியிலேயே அசத்திய ஸ்பென்சர்..!


மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!