ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்பாக, இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளில் பிரமாண்டமாக தொடங்குகிறது.
ஆசிய கோப்பை போட்டிகள் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்தநிலையில், ஆசிய கோப்பை தயாராகும் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் 1 நிமிடம் கொண்ட புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
வெளியான இந்த விளம்பரத்தில், முழுவதும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மட்டுமே காட்டப்பட்டார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காட்டப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்து வருகின்றனர். இந்த ப்ரோமோவின் தொடக்கத்தில், “இந்திய ரசிகர்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்துகின்றனர். தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிகள் முக்கிய போட்டிகளில் அடைந்த தோல்விகள், விராட் கோலிக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த ப்ரோமோ வீடியோவிற்கு கீழ் கமெண்ட் செய்த ரசிகர்கள், “இந்திய அணி என்பது முழுக்க முழுக்க விராட் கோலி மட்டும் அல்ல, நீங்கள் ஏன் மற்ற வீரர்களை வீடியோவில் காட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆசிய கோப்பையில் இந்திய அணி செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து, இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் நேபாள அணியை செப்டம்பர் 4ம் தேதி சந்திக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் உள்ள பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ஹைபிரிட் மாடல் முறையில் நடத்தப்படுகிறது. அதன்படி, 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. சூப்பர்-4 போட்டிகள் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி முழு பலத்துடன் விளையாடும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னும் மிடில் ஆர்டர் வரிசையை வலுசேர்க்கும் வகையில் கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்தகுதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், உலகக் கோப்பை அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.