ஆசிய கோப்பை 2023 போட்டியானது வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி பாகிஸ்தானில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டி முழுக்க முழுக்க பாகிஸ்தானில் நடத்தப்பட இருந்தநிலையில், இந்திய அணியின் பாதுகாப்பாய் கருத்தில்கொண்டு அவர்களை அந்நாட்டிற்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. 


இதையடுத்து, ஆசியக் கோப்பை 2023 போட்டியானது ஹைபிரிட் மாடலில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தானில் 4 போட்டிகள் மட்டுமே நடைபெறவுள்ள நிலையில், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது. 


இந்தநிலையில், ஆசிய கோப்பை 2023 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்று எழுதப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்று எழுதப்படுவது இதுவே முதல்முறை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த ஜெர்சியில் பாகிஸ்தான் என பொறிக்கப்பட்ட பெயர் இருந்தது. இதற்கு என்ன காரணம்? அவர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் ஏன் பாகிஸ்தான் என எழுதப்பட்டிருக்கிறது? என்பதனை கீழே பார்க்கலாம். 






ஆசியக்கோப்பை 2023 போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால், பாகிஸ்தானில் நடந்தால் விளையாட மாட்டோம் என இந்திய அணி முடிவி செய்ததையடுத்து, இந்தப் போட்டி ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி அனுமதி வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு போட்டியை நடத்தும் நாட்டின் பெயர், பங்கேற்கும் அணிகளின் ஜெர்சியில் பொறிக்கப்பட்டு இருக்கும். இப்போது ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடம் இருப்பதால் இந்திய அணியின் ஜெர்சியின் வலது பக்கத்தில் 'ஆசியா கோப்பை பாகிஸ்தான் 2023' என்று எழுதப்பட்டுள்ளது.  






ஆசிய கோப்பை 2023:


ஆசியக் கோப்பை 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இலங்கையில் உள்ள பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் இடையே பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடைபெறுகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டியின் இறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறவுள்ளது. பெரும்பாலான போட்டிகளை இலங்கை நடத்துகிறது. இந்திய அணி லீக் சுற்றில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் இது மூன்றாவது மோதலாக அமையும். 






இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆசிய அணிகள் குரூப் ஏ யிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை குரூப் பியிலும் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.