PAK vs ENG T20 WC Final LIVE: பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து!
PAK vs ENG T20 World Cup 2022 Final LIVE Updates: டி20 உலகக் கோப்பை பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள..
பைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
15 ஓவர்களில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது.
10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. 60 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து கோப்பையைக் கைப்பற்றும்.
பாகிஸ்தானுக்கு எதிரான சேஸிங்கில் 6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது.
பிலிப்ஸ் சால்ட் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷகீன் அஃப்ரிடி வீசிய பந்தில் போல்டு ஆனார் அலெக்ஸ் ஹேல்ஸ்.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பைனல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.
கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் ஷதாப் கான் ஆட்டமிழந்தார். அவர் அப்போது 20 ரன்கள் எடுத்திருந்தார்.
ஷான் மசூத் 38 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கர்ரன் பந்துவீச்சில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 106 ரன்கள் எடுத்துள்ளது.
இஃப்திகார் அகமது வந்தவேகத்தில் பெவிலியன் சென்றார். அவர் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார்.
10 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.
8வது ஓவரின் முதல் பந்தில் முகமது ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனார். அடில் ரஷித் பந்துவீசினார். 8 ரன்களில் நடையைக் கட்டிய ஹாரிஸை தொடர்ந்து ஷான் மசூத் களமிறங்கியுள்ளார்.
சாம் கர்ரன் வீசிய 5 வது ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் க்ளீன் போல்டானார்.
டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 12 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
1. ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 2 அலெக்ஸ் ஹேல்ஸ், 3 டேவிட் மாலன் / பில் சால்ட், 4 பென் ஸ்டோக்ஸ் 5 ஹாரி புரூக், 6 லியாம் லிவிங்ஸ்டோன், 7 மொயீன் அலி, 8 சாம் குர்ரன், 9 கிறிஸ் வோக்ஸ், 10 மார்க் வூட் / கிறிஸ் ஜோர்டன் / டேவிட் வில்லி, 11 அடில் ரஷித்.
1. பாபர் ஆசாம் (கேப்டன்), 2. முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 3. முகமது ஹரிஸ், 4. ஷான் மசூத், 5. இப்திகார் அகமது, 6. முகமது நவாஸ், 7. ஷதாப் கான், 8. முகமது வாசிம், 9. நசீம் ஷா, 10. ஹரிஸ் ரவுப், 11. ஷஹீன் ஷா அப்ரிடி.
Background
PAK vs ENG T20 World Cup 2022 Final LIVE Updates:
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர்.
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன் தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை தொடரிலும் இங்கிலாந்து கோப்பையை வெல்ல முயற்சிக்கும்.
இருநாட்டு அணிகளை பொறுத்தவரை, இங்கிலாந்து பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. ஆனால், டி20 போட்டியில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றியை தக்கவைக்கும்.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் தோல்வியுடன் தொடங்கியது. அதன்பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றது. தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் அணி தொடக்க ஜோடியை அதிகம் நம்பியுள்ளது. கடந்த சில போட்டிகளில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் பந்துவீச்சில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிரட்டி வருகின்றனர்.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கடந்த 1992ம் ஆண்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதுபோலவே இன்றைய போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என அந்நாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி:
பாகிஸ்தான் அணியை போலவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்று தருகின்றனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.
ஹெட் டூ ஹெட் :
போட்டிகள்: 28
இங்கிலாந்து வெற்றி: 18
பாகிஸ்தான் வெற்றி: 09
முடிவு இல்லை: 01
டி20 உலகக் கோப்பையில் நேருக்கு நேர் :
போட்டிகள்: 2
இங்கிலாந்து வெற்றி: 2
பாகிஸ்தான் வெற்றி: 0
மழைக்கு வாய்ப்பா..?
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியானது மழையால் காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக, மழை குறுக்கிட்டு போட்டி தொடங்க தாமதமானால் கூடுதல் நேரம் வழங்கப்படும் என ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.
போட்டி ஆரம்பம்: இரவு 7.00
முதல் முதல் இன்னிங்ஸ்: இரவு 7.00-8.28
இன்னிங்ஸ் இடைவேளை: இரவு 8.28-8.48
2வது இன்னிங்ஸ்: இரவு 8:48-10:30
மழை குறுக்கிட்டால் வழங்கப்படும் கூடுதல் நேரம் இரவு 10:30 முதல் காலை 12:00 வரை
ரிசர்வ் நாள் உள்ளதா..?
மெல்போர்ன் மைதானத்தில் கரு மேகக்கூட்டங்கள் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நாள் முழுவதும் மழை குறுக்கிட்டால் ரிசர்வ் நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரை இன்றே போட்டியை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி:
1. பாபர் ஆசாம் (கேப்டன்), 2. முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 3. முகமது ஹரிஸ், 4. ஷான் மசூத், 5. இப்திகார் அகமது, 6. முகமது நவாஸ், 7. ஷதாப் கான், 8. முகமது வாசிம், 9. நசீம் ஷா, 10. ஹரிஸ் ரவுப், 11. ஷஹீன் ஷா அப்ரிடி.
கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி:
1. ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 2 அலெக்ஸ் ஹேல்ஸ், 3 டேவிட் மாலன் / பில் சால்ட், 4 பென் ஸ்டோக்ஸ் 5 ஹாரி புரூக், 6 லியாம் லிவிங்ஸ்டோன், 7 மொயீன் அலி, 8 சாம் குர்ரன், 9 கிறிஸ் வோக்ஸ், 10 மார்க் வூட் / கிறிஸ் ஜோர்டன் / டேவிட் வில்லி, 11 அடில் ரஷித்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -