தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் திருமாவளவன் வந்திருந்தார். அப்போது, அவரது காலில் விழுந்து கூல் சுரேஷ் ஆசிர்வாதம் வாங்கினார். இதை பலரும் விமர்சித்தனர். 


திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு?


இந்த நிலையில், கூல் சுரேஷ் இதுதொடர்பாக பட நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சமீபத்தில் திருமாவளவனும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போ நான் ஓரமா நின்னேன். ஏனென்றால் அவர் ஒரு பெரியவர். எம்.பி. ஒரு சமுதாயத்தின் தலைவர். அதனால, அந்த இடத்துல அவரை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று நான் ஓரமா நின்னேன்.


அந்த கூட்டத்துலயும் திருமாவளவன் என்னைக் கூப்பிட்டு அவருக்கு போட்ருந்த சால்வையை எனக்குப் போடுங்கனு சொன்னாரு. இந்த நேரத்துல அவருக்கு நன்றி தெரிவத்துக் கொள்கிறேன். அதன்பிறகும் ஷு நக்கி, கால் நக்கினு சொல்றாங்க. நான் பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குறவன்தாங்க. திருமாவளவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குனதுல என்ன தப்பு? 


பெரியவங்க ஆசிர்வாதம்


ஜாதி பாத்து பழகுறவன் கிடையாது இந்த கூல் சுரேஷ். எனக்கு எல்லாரும் வேணும். மாம்பழமும் வேணும். பானையும் வேணும். சூரியனும் வேணும். எனக்குனு ஒரு கட்சி இருக்கு. கூல் சுரேஷ் கட்சி சிஎஸ்கே கட்சி. என்னைக்குமே பெரியவங்க ஆதரவோட இருக்கவன்தான் இந்த கூல் சுரேஷ். 


நான் இன்னைக்கு கதாநாயகனா நிக்குறேனான அதுக்கு காரணம் பெரியவங்க ஆசிர்வாதம்தான். என்னுடைய இலக்கு மக்களுக்கு நல்லது செய்யனும். சாதி, மதத்தை வச்சு அது பண்ணலாம். இது பண்ணலாம்னு நினைக்குறீங்க. அது உங்களுக்கு சோறு போடாது. ஜாதி, மத எதிர்ப்பை இன்னொருத்தவங்க எதிர்ப்பை காட்டாதீங்க. 


ஜாதி முத்திரை


திருமாவளவன்கிட்ட நேத்துகூட பேசுனேன். இன்னைக்கு பூஜைக்கு அவரை கூப்பிடனும்னு நினைச்சேன். ஆனா அவரைக் கூப்பிட்டா நான் ஒரு ஜாதினு முத்திரை குத்துவாங்க. பல பேரை நான் கூப்பிடவே இல்ல. அந்த மூடநம்பிக்கையை நான் விரும்பல. அதுனால என் மேல ஜாதி முத்திரையை குத்தாதீங்க. நான் சினிமா ஜாதி. 


இவ்வாறு அவர் பேசினார்.