உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13 வது லீக் போட்டி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை - ஆஸ்திரேலியா:
இந்த போட்டியில் இலங்கை அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. அதேபோல், கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடனும் தோல்வியடந்தது.
மறுபுறம், இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியுடன் தோல்வி, தென் ஆப்பிரிக்க அணியுடன் தோல்வி என்ற நிலையில் தான் இன்று (அக்டோபர் 16) ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
சரிந்து விழுந்த பேனர்:
இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதனத்தில் போட்டி தொடங்கியது.
இலங்கை அணியின் பேட்டிங் போது பலமான காற்று வீசியது. இதில் மைதானத்தின் மேல் இருந்த போர்ட் ஒன்று திடீரென ரசிகர்கள் இருக்கையில் சரிந்து விழுந்தது. இது அங்கே மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அந்த போர்ட் விழுந்த நேரத்தில் அந்த இருக்கைகளில் யாரும் இல்லை.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல், ரசிகர்கள் சமூக வலைதளபங்களில் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, ரசிகர் ஒருவர், “இருக்கைகளில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது கூடிய கூட்டம் போல் இந்த போட்டிக்கும் ரசிகர்கள் கூடியிருந்தால் என்ன ஆகி இருக்கும்” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 209 ரன்கள் எடுத்தது. தற்போது 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: AUS Vs SL Score LIVE: மிரட்டல் சேஸிங்.. ரன்ரேட்டைக் குறிவைக்கும் ஆஸ்திரேலியா; கைவிட்டுப் போகும் இலங்கையின் வெற்றி
மேலும் படிக்க: World Cup 2023: ஆப்கான் தந்த அதிர்ச்சி; இங்கிலாந்து படைத்த மோசமான வரலாறு!