NZ vs PAK LIVE Score: பகர்ஜமான் அதிரடியுடன் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்த மழை!
NZ vs PAK LIVE Score: நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
பாகிஸ்தான் வெற்றிக்கு 93 பந்துகளில் 142 ரன்கள் தேவை என்ற நிலையில் மீண்டும் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.
மழை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 342 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஆட்டம் தொடர உள்ளது.
21.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 152 ரன்களை குவித்துள்ளது.
நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஃபகர் ஜமான் 63 பந்துகளில் 100 ரன்களை விளாசினார்.
59 பந்துகளில் ஃபகர் ஜமான் 92 ரன்களை குவித்துள்ளார்.
17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 125 ரன்களை குவித்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 106 ரன்களை சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 91 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் ஃபகர் ஜமான் 39 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
ஃபகர் ஜமான் 35 பந்துகளில் 44 ரன்களை சேர்த்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் ஃபகர் ஜமான் 26 பந்துகளில் 36 ரன்களை சேர்த்துள்ளார்.
8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 56 ரன்கள் சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 32 ரன்களை சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபிக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மழையால் தாமதமான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தற்போது தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து சார்பில் ரச்சீன் ரவீந்திரா சிறப்பாக விளையாடி 108 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் வாசிம் ஜுன்யர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
48.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 383 ரன்களை சேர்த்துள்ளது.
47 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 366 ரன்களை சேர்த்துள்ளது.
45.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 350 ரன்களை கடந்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த சாப்மன் 39 ரன்களில் நடையை கட்டினார்.
43 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 337 ரன்களை சேர்த்துள்ளது.
42 ஓவர்கள் முடிவில் 326 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
41 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 318 ரன்களை குவித்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 307 ரன்களை சேர்த்துள்ளது.
39 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 291 ரன்களை சேர்த்துள்ளது.
நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்துள்ள மிட்செல் மற்றும் சாப்மென் கூட்டணி, அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது.
36 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 261 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வந்த ரவீந்திரா 108 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.
அபாரமாக விளையாடி வந்த வில்லியம்சன் 95 ரன்கள் சேர்த்து இருந்தபோது, இஃப்திகார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரச்சீன் ரவீந்திரா 88 பந்துகளில் 100 ரன்களை விளாசியுள்ளார்.
33 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 240 ரன்களை சேர்த்துள்ளது. ரவீந்திரா 95 ரன்களையும், வில்லியம்சன் 92 ரன்களையும் சேர்த்துள்ளார்.
32 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 236 ரன்களை சேர்த்துள்ளது.
ரவீந்திரா 88 ரன்களையும், வில்லியம்சன் 78 ரன்களையும் சேர்த்து அபாரமாக விளையாடி வருகின்றனர்.
30 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 211 ரன்களை சேர்த்துள்ளது.
ரச்சீன் ரவீந்திரா - வில்லியம்சன் கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 132 ரன்களை சேர்த்துள்ளது.
29 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 200 ரன்களை சேர்த்துள்ளது.
27 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 181 ரன்களை சேர்த்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பையில் இரண்டாவது போட்டியில் விளையாடும் வில்லியம்சன், தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
24 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 150 ரன்களை கடந்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 125 ரன்களை சேர்த்துள்ளது.
ரச்சீன் ரவீந்திரா 51 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 119 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ரச்சீன் ரவீந்திரா 49 பந்துகளில் 47 ரன்களை சேர்த்துள்ளார்.
உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் 1000 ரன்கள் கடந்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்த மூன்றாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை படைத்தார்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கான்வே 35 ரன்களில் வெளியேறிய நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. ரச்சின் ரவீந்திரா 28 ரன்களும், கான்வே 31 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 2 ஓவர்கள் முடிவில் 6 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்) டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர். இஷ் சோதி, டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்
அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி (உசாமா மிருக்கு), ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம், ஹரில் ரவுப்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
NZ vs PAK LIVE Score: உலகக் கோப்பை 2023ல் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் இருக்க விரும்பும். அதேநேரத்தில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பாகிஸ்தான் அணி விரும்பும். ஏனெனில் இந்த போட்டியில் எந்த அணி தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லும் பாதை அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்.
காயத்தால் திணறும் நியூசிலாந்து..
நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்து உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து, ஜிம்மி நீஷம் தனது வலது கை முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், மார்க் சாம்ப்மேன் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் கட்டைவிரல் காயம் காரணமாக விளையாடுவதில்லை.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் இதுவரை 115 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், நியூசிலாந்து 51 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 60 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சொந்த மண்ணில் நியூசிலாந்து 31 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 22 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில், வெளிநாட்டு மண்ணில் நியூசிலாந்து 6 வெற்றிகளையும், பாகிஸ்தான் 15 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
இதுதவிர இவ்விரு அணிகளுக்கிடையிலான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளின் முடிவை பார்த்தால் நியூசிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் எப்படி..?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. கடந்த 10 ஒருநாள் போட்டிகளில், இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 304. இருப்பினும் டாஸ் வென்ற அணி ரன் துரத்தி வெற்றியை பெறவே விரும்புகின்றன. ஏனெனில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 60 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நன்று.
யாருக்கு வெற்றி..?
இந்த போட்டியில் பாகிஸ்தான் நல்ல ஃபார்மில் இல்லாவிட்டாலும், அந்த அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் சாதனை மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஐந்து உலகக் கோப்பைத் தொடரில், 2011-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்.
நியூசிலாந்து அணி:
டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன்/கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -