கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, கடைசியாக விளையாடிய இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.


தொடர் தோல்வி:


இந்நிலையில், தான் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி விளையாடியது. இதில், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அதேபோல் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இலங்கை  அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மொத்தம் 9 போட்டிகள் விளையாடிய வங்கதேச அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது.


மேலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா,நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. இதனால், வங்கதேச அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். 







இதனிடையே, தொடர் தோல்விகளை சந்தித்த வங்கதேச அணி வீரர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே சொந்த நாட்டிற்கு சென்றுவிட்டனர்.


ஷகிப் அல் ஹசன் மீது தாக்குதல்:


இந்நிலையில் தான், வங்கதேச அணியின் கிரிக்கெட் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது அவர் மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். உடனே ஷகிப் அல் ஹசனைச் சுற்றி இருந்த அவரது பாதுகாப்பாளர்கள் அவரை பத்திரமாக அழைத்து செல்கின்றனர்.


தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, வங்கதேச அணியின் தொடர் தோல்விகளால் விரக்தி அடைந்த ரசிகர் ஒருவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதே நேரம் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் சிலர் இது இப்போது நடந்தது கிடையாது. இந்த நிகழ்வு நடைபெற்று ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Rahul Dravid: முடிவுக்கு வருகிறது ராகுல் டிராவிட் பதவிக்காலம்! இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்?


 


மேலும் படிக்க: Mohammed Shami: இறுதிப் போட்டியை பார்க்க நேரில் வராத முகமது ஷமியின் தாய் - எதனால் தெரியுமா?